‘இனி வலிமையான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன்’ – சிம்ஹா

நடிகர் சிம்ஹா நடிப்பில் தயாராகி பிப்ரவரி 10ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவிருக்கும் ‘வசந்த முல்லை’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. கன்னட மொழி முன்னோட்டத்தை ‘சூப்பர் ஸ்டார்’ சிவராஜ் குமாரும், தெலுங்கு மொழி முன்னோட்டத்தை ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவியும், தமிழ் மொழி முன்னோட்டத்தை மூத்த பத்திரிக்கையாளர்களும் வெளியிட்டனர். அறிமுக இயக்குநர் ரமணன் புருஷோத்தமா இயக்கத்தில் உருவான முதல் திரைப்படம் ‘வசந்த முல்லை’. இதில் சிம்ஹா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு…

Read More

‘தக்ஸ்’ திரைப்பட இசை ஆல்பத்தை, சோனி மியூசிக் நிறுவனம் வெளியிடுகிறது.

அதிரடி ஆக்சனுடன், ரத்தமும் சதையுமாக, உருவாகியுள்ள ‘தக்ஸ்’ திரைப்படத்தின் இசை ஆல்பத்தினை, புகழ்மிக்க இசை நிறுவனமான சோனி மியூசிக் நிறுவனம் அனைத்து மொழிகளிலும் வெளியிடுகிறது. இந்திய திரையுலகில் புகழ்பெற்ற டான்ஸ் மாஸ்டர் பிருந்தா கோபால் இயக்கியுள்ள ‘குமரி மாவட்டத்தின் தக்ஸ்’ திரைப்படம் இந்தி உட்பட பல மொழிகளில் விரைவில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் ‘RRR’, ‘விக்ரம்’, ‘டான்’, ‘வெந்து தணிந்தது காடு’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை விநியோகம் செய்ததோடு, ‘மும்பைகார்’ என்ற இந்திப் படத்தைத் தயாரித்துள்ள ரியா சிபு,…

Read More

மீண்டும் தயாரிப்பாளராகும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி

மலையாள தேசத்து நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில், அழுத்தமான வேடங்களில் நடித்து, ரசிகர்களிடம் நற்பெயரை சம்பாதித்த உற்சாகத்தில் இருக்கிறார். விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஆக்ஷன்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. அதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஜகமே தந்திரம்’ என்ற படத்தில் ஈழத் தமிழில் பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்திய இவர், ‘கார்கி’ என்ற படத்தை தயாரித்திருந்தார். இவர்…

Read More