நடிகை ஹன்சிகாவிற்கு விரைவில் திருமணம்
நடிகை ஹன்சிகா மோத்வானியின் திருமணம் குறித்தான பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், அது குறித்து அவர் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஹன்சிகா மோத்வானி தன்னுடைய குடும்ப நண்பரான மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சோஹேல் கதூரியாவை வருகிற டிசம்பர் மாதம் 4ம் தேதி ஜெய்ப்பூர் நகரத்தில் உள்ள 450 வருடங்கள் பழமை வாய்ந்த மண்டோடா ஃபோர்ட் அரண்மனையில் திருமணம் செய்ய உள்ளார். தனிப்பட்ட முறையில் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இந்தத் திருமணம்…