ஹனு-மான் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் திரைப்பட யுனிவர்ஸின் முதல் படமாக உருவாகும் ஹனு-மான் படத்தின் கதை அடிப்படையில் “அஞ்சனாத்ரி” என்ற கற்பனை இடத்தில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. முழுக்க சிஜியில் உலகத்தரத்தில் இந்த ஃபேண்ட்ஸி உலகம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் பொங்கல் கொண்டாட்டமாக திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழுவினர் பம்பரமாகச் சுழன்று வருகின்றனர். இப்படத்தின் தமிழ்ப் பதிப்பினை, விளம்பரப்படுத்தும் வகையில், படக்குழுவினர் சென்னையில், தமிழ் பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் சைத்தன்யா பேசியதாவது……

Read More

பிரசாந்த் வர்மா, தேஜா சஜ்ஜா- ‘ஹனு-மேன்’ படத்தின் வெளியீடு தள்ளிவைப்பு

படைப்புத்திறன் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் நட்சத்திர நாயகன் தேஜா சஜ்ஜா நடிப்பில் தயாரான ‘ஹனு-மேன்’ படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. புதிய வெளியீட்டு தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. படைப்புத்திறன் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில் தயாராகி வரும் ‘ஹனு- மேன்’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டீசரில்…

Read More

ஹனு-மேன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்

படைப்புத்திறன் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் தயாராகி வரும் ‘ஹனு -மேன்’ திரைப்படத்தில் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நிறைவடைந்திருக்கிறது. படப்பிடிப்பின் இறுதி நாளன்று பிரம்மாண்டமான படப்பிடிப்பு தளக் காணொளியை படக் குழுவினர் வெளியிட்டனர். படத்தின் தயாரிப்பு பணிகளை நிறைவு செய்ய 130 நாட்களாகி இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு இந்தியா முழுவதும் படப்பிடிப்பு நடத்தப்பட்டு இருக்கிறது. தற்போது படத்தின் இறுதி…

Read More

உலகளாவிய மொழிகளில் வெளியாகும் ஹனு-மேன்

கற்பனைத் திறன் மிகு படைப்பாளி பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் சூப்பர் ஹீரோ படைப்பான ‘ஹனு-மேன்’, எதிர்வரும் மே மாதம் 12ஆம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் ஆங்கிலம், ஸ்பானிஷ் மற்றும் ஜப்பானிய மொழிகளில் தயாராகி உலகளவில் வெளியாகிறது என படக்குழுவினர் பெருமிதத்துடன் தெரிவித்திருக்கிறார்கள். இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், நட்சத்திர நடிகர் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘ ஹனு- மேன்’. இந்த திரைப்படத்தின்…

Read More

‘ஹனு-மேன்’ ஒரு பான் இந்திய திரைப்படம் அல்ல இது ஒரு சர்வதேச திரைப்படம் – இயக்குநர் பிரசாந்த் வர்மா

படைப்பாற்றல் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், அசல் இந்திய சூப்பர் ஹீரோ திரைப்படமாக ‘ஹனு-மேன்’ தயாராகி இருக்கிறது. பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற ஜோம்பி ரெட்டி எனும் படத்திற்கு பிறகு அதில் நடித்த நாயகன் தேஜா சஜ்ஜாவுடன், பிரசாந்த் வர்மா இணைந்திருக்கும் இரண்டாவது படம் ‘ஹனு-மேன்’. அமிர்தா ஐயர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை பிரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. நிரஞ்சன் ரெட்டி தயாரித்திருக்கிறார். இப்படத்தின் டீசர் தயாரிப்பாளர்களால் வெளியிடப்பட்டது….

Read More

நடிகர் தேஜா சஜ்ஜா நடிக்கும் ‘ஹனு-மேன்’ டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு

தெலுங்கின் முன்னணி இளம் நட்சத்திர நடிகரான தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஹனு-மேன்’ படத்தின் டீசர் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘ஹனு-மேன்’. இதில் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடிக்கிறார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், கெட்டப் சீனு, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தாசரதி…

Read More