’டீச் ஃபார் சேஞ்ச்’ அமைப்பு மூலம் தெலுங்கானாவில் 167 பள்ளிகளை தத்தெடுக்கும் நடிகை லக்ஷ்மி மஞ்சு
நடிகை மற்றும் தயாரிப்பாளராக பிஸியாக வலம் வரும் லக்ஷ்மி மஞ்சு, சமூக பணிகளிலும் தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில், ‘டீச் ஃபார் சேஞ்ச்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 167 பள்ளிகளை தத்தெடுத்துள்ளார். லக்ஷ்மி மஞ்சு நடிப்பில் உருவாகியுள்ள ‘அக்னி நட்சத்திரம்’ மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் லக்ஷ்மி மஞ்சுவுடன், அவரது தந்தையும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகருமான மோகன் பாபு நடித்திருப்பதால், ஆந்திரா…