பொன்னியின் செல்வன் படத்துக்கு வரி விலக்கு அளிக்க வெண்டும்! தமிழக முதல்வருக்கு தேனாண்டாள் முரளி கோரிக்கை.

பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு விழா நேற்று நடந்தது. இதில் தென்னிந்திய திரைஉலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டார்கள். இதில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தேனாண்டாள் முரளி கலந்து கொண்டு பேசியது. பொன்னியின் செல்வன் அருமையான படைப்பு. மணி சாருக்கு நன்றி. இப்படியொரு பிரமாண்டமான படைப்பை கொடுத்த லைகா சுபாஸ்கரனுக்கு வாழ்த்துக்கள். நமது வரலாற்றை, மக்கள் பார்க்க ஒரு அரிய வாய்ப்பு. இந்த மாதிரி படங்களை மக்கள் அனைவரும் பார்க்க…

Read More

கமல் சாருடன் இன்னும் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை – நடிகை ஐஸ்வர்யாராய்

நடிகை ஐஸ்வர்யாராய் பேசும்போது எல்லோருக்கும் வணக்கம் என்று தமிழிலில் பேச ஆரம்பித்தார், ஐஸ்வர்யாராய். இங்கு வந்ததில் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. என்னுடைய குரு மணி ரத்னம் சார். அவர், எனக்கு எப்போதுமே குருவாகவே இருப்பார். இந்த வாய்ப்பளித்த அவருக்குநன்றி. இப்படம் எனக்கு மட்டுமல்ல ஒவ்வொருவருக்கும் சிறப்புரிமையை கொடுத்திருக்கிறது. ஒட்டுமொத்த இந்த படத்தின் குழுவோடு கனவும் இன்று நனவாயிருக்கிறது. இப்படம் சினிமாவிற்கு மாயாஜால உலகமாக இருக்கும். மணி ரத்னம் சார் மிகவும் திறமைசாலி. லைகா புரொடக்ஷன்ஸ், ரவிவர்மன் சார்,…

Read More

மணி ரத்தினத்திற்கு, சுஹாசினியின் காதலுக்கு முன்பே வேறு காதல் இருந்திருக்கிறது – நடிகர் பார்த்திபன்

போன வாரம் பார்த்த படம் பழகிவிட்டது போன மாதம் கேட்ட கதை பழையதாகி விட்டது. ஆனால், பல ஆண்டுகளாக நடந்த கதை கல்கியின் எழுத்தால் சரித்திரமாக மாறிவிட்ட இந்த படைப்பு, அவருடைய கனவை இன்று கலக்கி இருக்கிறார் மணி ரத்னம் அவர்கள். நான் பேசும்போது நீங்கள் கை தட்டி பாராட்டுவது போல் இன்று கல்கி இருந்திருந்தால் மணி ரத்தினம் அவர்களை கைதட்டி பாராட்டியிருந்திருப்பார். மணி ரத்னத்திற்கு சுஹாசினிக்கு முன்பு ஒரு காதல் இருந்திருக்கிறது. அது பொன்னியின் செல்வன்…

Read More

பொன்னியின் செல்வன் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் குந்தவை என்ன சொன்னார் தெரியுமா ?

இந்தக் கூட்டத்தை பார்க்கும் போது முதலில் என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கிறது. ரஜினி சார் கமல் சாரை எத்தனை முறை பார்த்தாலும் ஒவ்வொரு முறையும் வாவ் என்றே சொல்ல வைக்கிறது. 2கே கிட்ஸ் முதல் அனைவருக்குமே இந்த படம் சிறப்புரிமை, ஆசீர்வாதம், சிறந்த படம் என்று நான் என்ன வார்த்தை கூறினாலும் எனக்கு அது குறைவாகவே தோன்றுகிறது. அதைத்தாண்டி அதற்கு குறவாகவே தோன்றுகின்றது. அதை தாண்டி உள்ளுக்குள் ஒரு அலாதியான இன்பம் வருகிறது. இந்த வாய்ப்பை கொடுத்த…

Read More

இதுபோன்ற படம் எடுக்க வேண்டுமென்றால் அது மணி சாரால் மட்டும்தான் முடியும்!” – நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி பேசும்போது, உங்கள் அனைவரின் முன்னிலையில் முதல் பாடலை வெளியிடுவதில் மகிழ்ச்சியாக உள்ளது. ஜெயராம் சார் கூறியதுபோல, இது நம்முடைய படம். தமிழர்களுடைய படம். எல்லோர் மனதிலும் இருக்கும் படம். ஆனால், இப்படத்தில் ஒரு வித்தியாசம். இப்படத்தின் கதை அனைவருக்கும் தெரியும். இருப்பினும், திரைப்படமாக பார்க்க வேண்டும் என்பதில் அனைவருக்கும் ஆர்வம் இருக்கிறது. இப்படத்தில் பணியாற்றியது சுவாரசியமாக இருந்தது. நான், ஜெயம் ரவி மற்றும் ஜெயராம் சார் தான் அதிக நாட்கள் ஒன்றாக இருந்திருக்கிறோம். ஜெயராம்…

Read More

லைகாவின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் டீசர் வெளியீடு

மக்கள் திலகம்’ எம்ஜிஆர் மற்றும் இயக்குநர் மணிரத்னத்தின் கனவு படைப்பான அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல், தயாரிப்பாளர் சுபாஷ்கரனின் லைகா நிறுவனம் என்ற முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்களிப்பு இல்லாமல், உருவாக சாத்தியமேயில்லை என்பது இப்படத்தின் டீஸர் மூலம் தெரியவருகிறது. ‘பாகுபலி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் ரசிகர்களிடம் இது போன்ற வரலாற்று கதைகள் தமிழ் மொழியில் வெளியாகாதா..? என்ற எண்ணம் ஏற்பட்டது. அதிலும் அமரர் கல்கி உலகம் போற்றும் சோழ சாம்ராஜ்யத்தை…

Read More

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா!!!

லைக்கா ப்ரோடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கிஸ் இணைந்து தயாரித்து, இயக்குனர் மணிரத்னம் இயக்கி, பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு அப்படத்தின் குழுவினர் பேசியதாவது: நடிகர் கார்த்தி பேசும்போது, நம் பள்ளிப்பருவத்தில் வரலாறு படம் என்றாலே தூங்கிவிடுவோம். வரலாற்றின் மீது ஆர்வம் இருக்காது. அப்படி விழித்திருக்கும் எஞ்சிய நேரத்தில் நாம் கேட்டதெல்லாம் அந்நியர் நம்மை அடிமைபடுத்திய தான். இப்போது இருக்கும் காலகட்டத்தில் புத்தகம் படிப்பதற்கு யாருக்கும் நேரமில்லை. 10…

Read More