புத்தாண்டில் இசைஞானி இளையராஜாவை சந்தித்து ஆசி பெற்ற சாமானியன் குழு
எண்பது, தொண்ணூறுகளில் மக்கள் நாயகன் என எளிய மக்களின் முகமாக அறியப்பட்டவர் நடிகர் ராமராஜன். தொடர்ந்து வெள்ளி விழாப்படங்களை கொடுத்த பெருமை இவருக்கு மட்டுமே உண்டு. இவரது வெற்றியின் பின்னணியில் தூணாக இருந்து அவரது படங்களுக்கு காலத்தால் அழியாத இனிமையான பாடல்களை கொடுத்தவர் இசைஞானி இளையராஜா. தற்போது இவர்கள் இருவரும் 23 வருடங்களுக்கு பிறகு ‘சாமானியன்’ என்கிற படத்தின் மூலம் மீண்டும் கைகோர்த்துள்ளனர். இப்படி ஒரு அபூர்வ கூட்டணியை மீண்டும் இணைத்து படம் இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்…