‘ராஜா கிளி’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ராஜா கிளி’. கதாநாயகனாக சமுத்திரக்கனி, கதாநாயகிகளாக சுவேடா ஷ்ரிம்ப்டன், சுபா தேவராஜ் ஆகியோர் நடிக்கின்றனர் நடிகர் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதி ராமையா திரைக்கதையை எழுதி படத்தை இயக்கியுள்ளார். மேலும் நடிகர் தம்பி ராமையா இந்தப்படத்தின் கதை, வசனம், பாடல்கள் எழுதி இசையமைத்துள்ளதுடன் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார். சாட்டை, அப்பா, வினோதய சித்தம் ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் சமுத்திரக்கனி-தம்பி ராமையா…

Read More

கொட்டுக்காளி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ், தி லிட்டில் வேவ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து இருக்கும் ‘கொட்டுக்காளி’ திரைப்படத்தில் சூரி மற்றும் அன்னா பென் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொழுதுபோக்கு அம்சங்களுடன், பாராட்டுக்குரிய திரைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ், அதன் அடுத்த தயாரிப்பான ‘கொட்டுக்காளி’ மூலம் பார்வையாளர்களை கவர உள்ளது. சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இந்த திரைப்படத்தைத் தயாரிக்கிறது என அதன் அறிவிப்பில்…

Read More

” செம்பி ” படத்தின் மூலம் சூரிய பிரகாஷ் நடிகராக தனது கலையுலக பயணத்தை துவங்கியுள்ளார்.

அன்புள்ள பத்திரிக்கை, ஊடகம், இணையதள, சமூக வலைதள நண்பர்களுக்கு வணக்கம் … கோவை சரளா மற்றும் அஷ்வின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் இன்று திரையங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ” செம்பி ” படத்தின் மூலம் எனது மகன் சூரிய பிரகாஷ் நடிகராக தனது கலையுலக பயணத்தை துவங்கியுள்ளார். நான் பணியாற்றி படங்களுக்கு ஆதரவு கொடுத்ததை போல தங்களின் விமர்சனங்களில் அவரை பற்றி ஒரு சில வார்த்தைகள் எழுதி என் மகன்…

Read More

கர்மா திருப்பி அடிக்கும் ; ஜீவி-2 நாயகன் வெற்றியின் நம்பிக்கை

கடந்த 2019ல் ‘எட்டு தோட்டாக்கள் புகழ்’ நடிகர் வெற்றி, கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வித்தியாசமான கதை அம்சத்துடன் வெளியாகி ரசிகர்கள், விமர்சகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள் அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்ற படம் ஜீவி.. இயக்குநர் விஜே கோபிநாத் இயக்கிய இந்தப்படத்தின் இரண்டாம் பாகமாக தற்போது ஜீவி-2 உருவாகியுள்ளது. மாநாடு என்கிற வெற்றி படத்தை தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தயாரித்துள்ளது. முதல் பாகத்தில் இடம்பெற்ற அஸ்வினி சந்திரசேகர், ரோகிணி, மைம்…

Read More