“வெள்ளிமலை” படத்தின் டீசர் வெளியானது !

SUPERB CREATIONS ராஜகோபால் இளங்கோவன் வழங்கும்,
இயக்குநர் ஓம் விஜய் இயக்கத்தில்,
“வெள்ளிமலை” டீசர் வெளியானது !

பழங்காலத்திலிருந்தே, உயிர்க்கொல்லி நோய்களைக் கூட இலைகளின் சாற்றால் குணப்படுத்தும் இயற்கை மருந்துகள், அற்புத குணப்படுத்தும் சக்திகளின் பூமி என்று தமிழ்நாடு எப்போதும் போற்றப்படுகிறது. துறவி போகர் (போகநாதர்) போன்ற சித்தர்கள் வாழ்ந்த தமிழ்நாடு அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது, அவர்களின் மருந்தியல் இன்றளவிலும் சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.

இன்றைய மருத்துவத்திற்கு கோரக்கர், புலிப்பாணி, அகத்தீசர் போன்ற சித்தர்கள் அளித்த பங்களிப்பு மறுக்கமுடியாதது, அவர்கள் வழங்கிய பூர்ண லேகியம் மற்றும் சொர்ணம் ஆகியவை சமகால உலகில் இயற்கை மருந்துகளின் அடித்தளமாக உள்ளன. இந்த துறவிகள் தந்த பெரும் இயற்கை மருந்துகளின் பங்களிப்பால் நாம் ஆசீர்வதிக்கப்பட்ட போதிலும், தற்போது செயற்கை மருந்துகளுக்கு அடிமையாகிவிட்டோம், இது ஒரு நோயைக் குணப்படுத்தும் பெயரில் மற்றொரு நோயை தான் தூண்டுகிறது.

வெள்ளிமலை, திரைப்படம் சித்தர்களின் தனித்துவத்தையும், மனம், உடல் மற்றும் ஆன்மாவின் நல்ல ஆரோக்கியத்திற்கு அவர்களின் பங்களிப்பை போற்றும் ஒரு சமூக அக்கறையுள்ள பொழுதுபோக்கு படைப்பாகும்.

முண்டாசுப்பட்டி, காதலும் கடந்து போகும், ரஜினி முருகன், ஜெய் பீம் ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்த நடிகர் சூப்பர் குட் சுப்ரமணியன், ‘வெள்ளிமலை’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் வீர சுபாஷ் மற்றும் அஞ்சு கிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகி, அழுத்தமான கருத்துகள் சமூக அக்கறையுள்ள படைப்பாக இருக்கும் என்பதை தெளிவுபடுத்துகிறது. ஓம் விஜய் இயக்கியுள்ள இந்தப் படத்தை Superb Creations சார்பில் ராஜகோபால் இளங்கோவன் தயாரித்துள்ளார்.

ஒரு அழகான மலை கிராமத்தின் பின்னணியில் கதை அமைக்கப்பட்டுள்ளது., சுமார் நாற்பது ஆண்டுகளாக ஒரு மருத்துவரிடம் எந்த சிகிச்சையும் மருந்துகளும் எடுக்காமல் கேலி செய்யும் கிராமவாசிகளைச் சுற்றியே கதை நகர்கிறது. ஆனால், எதுவும் ஒரு மருத்துவரின் மனநிலையை ஏமாற்றவோ அல்லது தடுக்கவோ இல்லை, அதே நபர்களிடம் அவர் தனது திறமையை எவ்வாறு நிரூபிக்கிறார் என்பது இந்தக் கதையின் மையக்கருவாக அமைந்துள்ளது.

பெருமாள் (வல்லன் மற்றும் ஒன் மலையாளப் படப் புகழ்) ஒளிப்பதிவு செய்கிறார். சதீஷ் சூர்யா (நான், சூரரைப் போற்று, நாச்சியார், வர்மா புகழ்) எடிட்டர். விக்ரம் செல்வா (இடியட் மற்றும் லாக் புகழ்) இசையமைக்கிறார். மாயபாண்டியன் (ஸ்கெட்ச் & வர்மா புகழ்) கலை இயக்குனர். கு.கார்த்திக் பாடல்கள் எழுதியுள்ளார் மற்றும் மனோகரன் (ஸ்டில்ஸ்) தொழில் நுட்ப குழுவில் பணியாற்றுகின்றனர்.

‘வெள்ளிமலை’ திரைப்படத்தின் டிரைலர், ஆடியோ மற்றும் உலகம் முழுவதுமான திரையரங்கு வெளியீடு தொடர்பான அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைதென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் கமல்ஹாசன் அவர்களை சந்தித்துள்ளனர்
அடுத்த கட்டுரை‘சாணி காயிதம் திரைப்படத்தில் தனது கதாபாத்திரம் பற்றி பகிர்ந்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here