எஸ் ஜே சூர்யா – மான்ஸ்டர் ஒரு பார்வை

0
41

இயக்குனராக இருந்து தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற இயக்குனர் எஸ் ஜே சூர்யா. தற்போது பல படங்களில் வில்லனாகவும் நடித்து வந்தார். இதை தொடர்ந்து இவர் கதாநாயகனாக நடித்து வெளிவந்துள்ள மான்ஸ்டர் படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

கதைக்களம்
வாடகை வீட்டிலிருந்து சென்னையில் உள்ள மின்சார வாரியத்தில் வேலை பார்க்கும் எஸ் ஜே சூர்யா. பெண் பார்க்க தஞ்சாவூர் செல்கிறார். அங்கு சொந்த வீடு இருக்கிறதா என்று கேட்க, இல்லை என்கிறார் எஸ் ஜே சூர்யா. பின்னர் சென்னையில் ஒரு வீட்டை வாங்குகிறார். சிறிது நாள் கழித்து அவர் வாங்கிய அந்த வீட்டில் எலி தொல்லை இருப்பது தெரிய வருகிறது. இதனால் அந்த எலியை விரட்ட பல வழிமுறைகளை பயன்படுத்துகிறார். கடைசியில் எலியை விரட்டினாரா இல்லையா என்பதே மீதி கதை.

எஸ் ஜே சூர்யா:
தன்னுடைய படைப்புகளால் தான் ஒரு சிறந்த இயக்குனர் என்று நிரூபித்த எஸ் ஜே சூர்யா தற்போது தான் ஒரு சிறந்த நடிகன் என்ற பெயரையும் இந்த படம் மூலம் பெற்றுள்ளார். மான்ஸ்டர் படத்தில் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கட்சிதமாக நடித்து கொடுத்துள்ளார் எஸ் ஜே சூர்யா. அவர் கொடுக்கும் சிறு சிறு ரியாக்ஷன் மூலம் நம்மை ரசிக்க வைத்துள்ளார். 

பிரியா பவானி ஷங்கர்:
எஸ் ஜே சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருக்கும் பிரியா பவானி ஷங்கரும் கதையோடு வரும் வலுவுள்ள முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது இவருடைய மூன்றாவது வெற்றி படம் என்றே சொல்லாம்.

கருணாகரன்:
எஸ் ஜே சூர்யாவுக்கு நண்பராக வரும் கருணாகரன் இந்த படத்தில் நிறைய இடங்களில் நம்மை சிரிக்க வைத்துள்ளார். மற்ற படங்களை விட இந்த படத்தில் காமெடியில் கலக்கியுள்ளார்.

ஜஸ்டின் பிரபாகரன்:
ஒருநாள் கூத்து படத்துக்கு பிறகு மறுபடியும் இயக்குனர் நெல்சன் வெங்கடேசனுடன் இந்த படத்தில்  இணைந்துள்ளார். மிகவும் அருமையான பாடல்களை கொடுத்துள்ளார். அதே போல் பிண்ணனி இசையிலும் கவனம் செலுத்தியுள்ளார். முக்கியமாக எலிக்கு கொடுக்கும் பிண்ணனி இசை மிகவும் சிறப்பு.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here