சில நேரங்களில் சில மனிதர்கள் – தலைப்பை வெளியிட்ட கமல்ஹாசன்

0
17

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் நாசர் மகன் அபிஹாசன் ஏற்கனவே கமல்ஹாசன் தயாரித்த ’கடாரம் கொண்டான்’ என்ற திரைப்படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்தார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நாசர் மகன் அபிஹாசன் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டிலை கமல்ஹாசன் தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு ’சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

ஏஆர் என்டர்டைன்மென்ட் மற்றும் டிரைடண்ட்ஸ் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் அசோக் செல்வன் நடிக்க, அவருடன் அபிஹாசன், மணிகண்டன், பிரவீன் ராஜா, ரேகா, ரித்விகா, அஞ்சு குரியன், நாசர், கே எஸ் ரவிக்குமார், அனுபமா குமார், பானுப்பிரியா, இளவரசு உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here