தளபதி விஜயின் சர்கார் படத்துக்கு ஏற்பட்ட சிக்கல்

0
61

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் சர்கார் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து கொண்டு வருகிறது. எப்பொழுது நவம்பர் 6 ம் தேதி வரும் (தீபாவளிக்கு) என்று ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

என்னதான் சர்கார் படத்திற்கு தொடர்ந்து பல பிரச்சனைகள் வந்து கொண்டிருந்தாலும், தீபாவளிக்கு சர்கார் படம் வெளியாகும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்கள் தளபதி ரசிகர்கள். அதுமட்டுமில்லாமல் இவ்வளவு பெரிய பிரச்சனைகள் இந்த படத்திற்கு வந்துகொண்டு இருந்தாலும், சர்கார் படத்தினுடைய வியாபாரம் குறையாமல் சுமார் 200 கோடி தாண்டி சாதனையை படைத்துள்ளது.

இந்தநிலையில் சர்கார் படத்தோட அதிகாலை 5 மணி காட்சிகளுக்கு சிக்கல் ஏற்பட்டிருப்பதாக பிரபல திரையரங்கை சேர்ந்த ரேவந்த் சரண் கூறிருக்கிறார். அது என்னவென்றால் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் “1 மணி காட்சி போடப்படுமா?” என்று கேட்க அதற்கு இன்னும் 5 மணி காட்சிகளே உறுதியாகவில்லை என்று ரோகினி திரையரங்கை சேர்ந்த ரேவந்த் சரண் பதில் ட்விட்டில் தெரிவித்தத்து மட்டுமில்லாமல் விஜயின் எதிரிகள் அவரை பழிவாங்க பல முயற்சிகள் செய்வதாக அவர் கூறியிருப்பது அதிர்ச்சிக்குரியதாக இருக்கிறது.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here