நயன்தாரா நடிப்பில் சர்ஜுன் இயக்கிவரும் புதிய படம்

0
29

நயன்தாரா படம் என்றாலே மக்கள் மத்தியில் ஒரு சிறந்த வரவேற்பு உண்டு. ஒரு படத்தில எல்லா விதமான கலைகளையும் சிறப்பாக பயன்படுத்தும் ஒரு சிறந்த நடிகை.

இந்நிலையில், நயன்தாரா நடிப்பில் சர்ஜுன் இயக்கிவரும் புதிய படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து, AL விஜய் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் நயன்தாரா. இது AL விஜய் இயக்குவதாக அறிவித்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படம் என்று முதலில் தகவல் பரவியது. ஆனால், அதை மறுத்துள்ள படக்குழுவினர், நயன்தாரா நடிக்கும் இந்த படம் திரில்லர் பின்னணி கதைக்களம் என்பதை உறுதிசெய்துள்ளது.

தற்போது ‘தேவி 2’ படத்தை மொரீஷியஸ் தீவில் படமாக்கி வரும் விஜய், அதை முடித்துக்கொண்டு இம்மாத இறுதியில் சென்னை திரும்புகிறார். அதன் பிறகு, நயன்தாரா படத்துக்கான வேலைகளை தொடங்க உள்ளார்.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here