மீண்டும் குண்டாக காட்சியளித்த நடிகை

0
70

தமிழ், தெலுங்கு மொழிகளில் ரசிகர்களின் உள்ளதை கவர்ந்து முன்னணி நடிகையாக இருப்பவர்தான் நடிகை அனுஷ்கா. இவர் தமிழில் மாதவனுக்கு ஜோடியாக இரண்டு படத்தின் மூலம் அறிமுகமானார். இதுமட்டுமில்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தல அஜித், தளபதி விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி, ஆர்யா, சிம்பு என்று பல பிரபல நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். முக்கியமாக அனுஷ்கா நடிப்பில் கடைசியாக நாம் பார்த்து வியந்த படங்கள் பாகுபலி, பாகுமதி. இந்த படத்திற்கு பிறகு ஒரு வருடமாக எந்த படத்திலும் இவர் நடிக்கவில்லை. இதனால ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் கிடைத்திருந்தது என்றே சொல்லவேண்டும். குறிப்பாக நடிகை அனுஷ்கா இரண்டு படத்திற்கு பிறகு மீண்டும் மாதவனுக்கு ஜோடியாக ‘சைலென்ஸ்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாயிருப்பதாக தகவல் வெளியாகிருந்தது.

இதை தொடர்ந்து மிக பெரிய பட்ஜெட்டில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவர்களின் நடிப்பில் வெளிவர இருக்கின்ற சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் ஜான்சி ராணியாக சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் அனுஷ்கா அவர்கள். இவர் மட்டுமில்லாமல் நயன்தாரா, விஜய் சேதுபதி, தமன்னா, அமிதாப்பச்சன், ஜெகபதி பாபு, கிச்சா சுதீப் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக உள்ள இந்த நிலையில் அனுஷ்கா அவர்கள் மறுபடியும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

அது என்னவென்றால் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை அனுஷ்கா கூட்டிருந்தார் என்பது உங்களுக்கு தெரிந்த ஒன்றுதான். அந்த படம் அந்தளவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை என்றாலும், இதற்காக பல விதமான உடல் பயிற்சிகளை செய்து உடல் எடையை சற்று குறைத்திருந்தார். தற்போது அவர் நடித்து வரும் ‘சைலென்ஸ்’ படத்திற்கான படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்துள்ளது. அதை முடித்து ஹைதராபாத்தித்தில் விமான நிலையத்திற்கு வந்த போது மறுபடியும் உடல் எடை கூடியது போல் அனுஷ்கா தோன்றியுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதுதான் தற்போது டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்ற ஒரு செய்தியாக உள்ளது.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here