லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா 10 வருஷம் கழித்து விஜய்க்கு ஜோடியாக நடிகிறார்

0
35

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 63. தளபதி விஜய் வைத்து தெறி, மெர்சல் படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக அட்லீ இயக்கும் பெயரிடப்படாத படம்தான் தளபதி 63.

ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா விஜய்க்கு ஜோடியா 10 வருஷம் கழித்து கதாநாயகியாக நடித்து வருகிறார்.இவரை போலவே நடிகர் விவேக்கும் தளபதியுடன் ரொம்ப காலம் கழித்து நடிக்கின்றார்.

மேலும் பரியேறும் பெருமாள் கதிர், மேயாத மான் இந்துஜா, விவேக், யோகி பாபு, ஆனந்த் ராஜ், டேனியல் பாலாஜி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்ற இந்த படத்திற்கு இசை புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கின்ற தளபதி விஜய் 63 தீபாவளிக்கு வெளிவர இருக்கிறது.

இந்த படத்தின் 60 சதவிகிதம் படப்பிடிப்பு முடியவடைந்த நிலையில் மீதமுள்ள படப்பிடிப்பு முடிய இன்னும் 50 நாட்கள் தேவைப்படும் என்று சொல்லப்படுகிறது. முக்கியமாக ரிலீசுக்கு முன்பே தளபதி 63 யின் வியாபாரமும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. ஏனென்றால், இப்படத்தின் ஓவர்சீஸ் வியாபாரம் கிட்டத்தட்ட ரூ 30 கோடிக்கும் அதிகமாக விற்பனையாகி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. ஆனால் படக்குழு தரப்பில் இருந்து எந்தவொரு அதிகாரபூர்வமான தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here