விஜய் சேதுபதி மாரிமுத்துவுக்கு கொடுத்த பரிசு என்ன?

0
32

ஆசிய தடகள போட்டியில் தங்கபதக்கத்தை வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவை பலரும் நேரில் சந்தித்து பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

இன்று இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவாக்கியுள்ளார். தற்போது மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி 5 லட்சம் ரூபாய் காசோலையை தன்னுடைய ரசிகர் மன்றம் சார்பில் வழங்கியுள்ளார். விஜய் சேதுபதி அடுத்தா உருவாகி வருகின்ற லாபம் படத்தை இயக்கி வருகின்ற ஜனநாதன் அவர்கள் தொலைபேசி மூலம் பாராட்டுகளை தெரிவித்துளளார்.

மேலும் இதற்கு முன்பு காமெடி நடிகர் ரோபோ ஷங்கர் அவர்களும் கோமதி மரிமுத்தை நேரில் சந்தித்து பாராட்டி ரூபாய் 1 லட்சம் காசோலையை வழங்கிருந்தார். முக்கியமாக வீராங்கனை கோமதி மாரிமுத்து, தான் கிழிந்த ஷூயுடன்தான் ஓடியதாக தெரிவித்திருந்தார். இதனை பார்த்த பலரும் இந்தியா அரசு மீது கடும் விமர்சனத்தை எழுப்பியிருந்தனர்.

மக்கள் மட்டுமில்லாமல் நடிகர் ஜி வி பிரகாஷ்யும் கோமதி மாரிமுத்துவை நேரில் சந்தித்து புது ஷூ ஒன்றை வாங்கி கொடுத்தார். இதை போல் பல பிரபலங்கள் கோமதி மாரிமுத்துவுக்கு பாராட்டுகளையும், உதவிகளையும் செய்துள்ளனர்.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here