விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம், அமெரிக்காவில் பிரமாண்டம்!

0
51

விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம், அமெரிக்காவில் பிரமாண்டம்!

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘சர்கார்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. க்ரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

இந்த படத்தை வெளிநாடுகளிலும் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். குறிப்பாக, அமெரிக்காவில் மட்டும் 150க்கும் மேற்பட்ட இடங்களில் பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய இருக்கின்றனர்.

கோலிவுட் மூவிஸ் மற்றும் நர்மதா டிராவல்ஸ் இணைந்து அமெரிக்க வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ளனர். விஜய் இதுவரை நடித்து வெளியான படங்களிலேயே இந்தப் படம்தான் அதிக திரையரங்குகளில் வெளியாகும் படம் என்ற பெருமையைப் பெறுகிறது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, முக்கியக் கதாபாத்திரங்களில் வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, ராதாரவி, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. விஜய் தன்னுடைய டப்பிங்கை முடித்துக் கொடுத்துவிட்டாராம்.

தமிழில் மட்டுமின்றி, தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு ‘சர்கார்’ ரிலீஸாக இருக்கிறது. தெலுங்கு டப்பிங் உரிமையை வல்லபனேனி அசோக் பெற்றுள்ளார்.

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here