ஹிந்தியிலும் ஐயப்பனும் கோஷியும் !!

0
13

சச்சி இயக்கத்தில் பிரிதிவிராஜ், பிஜீ மேனன் நடித்து கடந்த பிப்ரவரியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் தான் மலையாளத்தில் வெளியான ஐயப்பனும் கோஷியும்.

வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் வெற்றிபெற்ற இப்படம் இப்போது ரீமேக் உரிமம் விலை போவதிலும் முன்னோக்கியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமமும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆப்ரஹாம் வாங்கியுள்ளார். இந்தி ரீமேக்கை ஜானின் தயாரிப்பு நிறுவனமான ஜே.ஏ. என்டர்டெயின்மென்ட் தயாரிக்கவுள்ளது.

நடிகர் ஜான் ஆப்ரஹாம் ஜிஸம், தூம், ஜிண்டா, பாபுல், ரேஸ் 2, சத்யமேவ ஜெயதே போன்ற பல ஹிந்தி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற அவர், விக்கி டோனர், மெராஸ் கஃபே, பாட்லா ஹவுஸ் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். தமிழில் ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களை தயாரித்த நிர்வாணம் இப்படத்தின் தமிழ் உரிமத்தை vangiyullathu. விரைவில் நடிக்கப்போவது யார் என்ற தகவல் வெளியாகும். 

Loading...

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here