Mohanlal Apologises For His Comment On Kerala Nun

கேரளாவுல ஏழைகளுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் மோகன்லால் கிட்ட, கேரளா மாநிலத்தில் பாதிரியரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கன்னியாஸ்திரி மற்றும் அது தொடர்பா நடந்து வரும் போராட்டங்கள் சம்மந்தமா செய்தியாளர்கள் கேள்வியை எழுப்பினர்.

இதற்கு மோகன்லால் இங்கு நல்ல விஷயம் நடக்கும் போது இப்படி தேவையில்லாத கேள்விகளை கேட்க உங்களுக்கு வெட்கம் இல்லையா?, இந்த நிகழ்ச்சிக்கும், கன்னியாஸ்திரி பிரச்சனைக்கும் என்ன தொடர்பு இருக்கு. மழையால் பேரழிவு ஏற்பட்டுருக்கு, அதை விட்டுட்டு நீங்கள் எதைப்பற்றியோ கேட்கிறிர்கள் என்று கோபப்பட்டு பேசினார். மோகன்லால் இப்படி பேசியது சமூக வலைத்தளத்தில் வைரலானது.

பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி பற்றிய கேள்விக்கு மோகன்லால் பதில் அளித்து இருக்கலாம்னு நிறைய பேரு விமர்சித்து உள்ளனர். இதுபோக என்னோட அறக்கட்டளை சார்பில்தான் வெள்ளத்தால பாதிக்கப்பட்டவர்களுக்கு நலஉதவி வழங்கும் திட்டம் நடந்தது.

இந்த சூழல்ல கன்னியாஸ்திரி பலாத்கார சம்பவத்தை பற்றி கேட்டது பொருந்தாத கேள்வியா தோன்றிற்று, அதுமட்டுமில்லாமல் அந்த கேள்விக்கு பதில் அளிக்கும் மனநிலையில் நான் இல்லை, அதனால் தான் கடுமையாக நடந்து கொண்டதாகவும், இந்த விஷயத்தை பெரிதுபடுத்தாமல் என்னை முத்த சகோதரர் போல் கருதி மன்னிக்குமாறு செய்தியாளர்களிடம் மோகன்லால் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *