‘இமெயில்’ படத்தின் டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி !!

‘இமெயில்’ படத்தின் டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி SR பிலிம் பேக்ட்ரி சார்பில் S.R.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இமெயில்’. இப்படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகை ராகினி திவிவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக ‘முருகா’ அசோக்குமார் நடித்துள்ளார். மேலும் போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ , ஆதவ் பாலாஜி, அக்ஷய்குமார், ஆரஞ்சு மிட்டாய் பிரபா, வனிதா, ரத்னா ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ளது இமெயில். இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் கடந்த…

Read More

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது

சமீபகாலமாக வெற்றிப் படங்களை கொடுத்து மகிழ்ச்சியில் இருக்கும் நடிகர் விஜய் சேதுபதி முதன்முறையாக இயக்குனர் மிஷ்கினுடன் கைகோர்த்தி உள்ளார். ட்ரெயின் (Train) திரைப்படத்தை தமிழ்த் திரையுலகின் மாபெரும் வெற்றி படங்களை கொடுத்த பிரம்மாண்ட தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு இந்த ட்ரெயின் (Train) படத்தை தயாரிக்கிறார். இந்த கதை ஒரு ரயில் பயணத்தில் நடைபெறும் அதிரடி திகில் நிறைந்த கதை என கூறப்படுகிறது, எனவே ட்ரெயின் (Train) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்காக விஜய் சேதுபதி வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார்,…

Read More

நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமான ‘மஹாராஜா’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியீட்டு விழா!

பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் & தி ரூட் ஜெகதீஸ் தயாரிப்பில் ‘குரங்கு பொம்மை’ நிதிலன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக ‘மஹாராஜா’ உருவாகி வருகிறது. இதன் முதல் பார்வை போஸ்டர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் முதலாவதாக பேசிய இசையமைப்பாளர் அஜ்னீஷ் லோக்நாத், “ விஜய் சேதுபதி சாரின் மிகப்பெரிய ரசிகன் நான். அவரின் ஐம்பதாவது படத்திற்கு நான் இசையமைக்கிறேன் என்பதே எனக்கு பெருமையாக உள்ளது. ‘குரங்கு பொம்மை’ படத்திலேயே நிதிலன் அட்டகாசம் செய்திருப்பார்….

Read More

ஜவான் தமிழ் திரைப்பட விமர்சனம்

ஜவான் கதை கதையின் ஆரம்பத்தில் கதையின் நாயகன் ஷாருக்கான் அவரின் குழுவுடன் இணைந்து ஒரு ரயிலை கடத்துகிறார்கள். அப்படி கடத்திய பின் இவர்கள் அரசுக்கு ஒரு டிமாண்ட் வைக்கின்றனர். பிறகு இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த ஒருவரை நியமிக்கின்றனர். அடுத்து பேச்சுவார்த்தை நடத்த வருபர்தான் கதையின் நாயகி நயன்தாரா. அப்படி நயன்தாரா வந்து பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்த பிறகு, ஷாருக்கான் வைத்த டிமாண்ட் என்ன என்பதும், இவர்களெல்லாம் யார்?, எதற்காக இந்த ரயிலை கடத்தினார்கள், என்பதும் அப்படி இவர்கள்…

Read More

ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி- ரசிகர்கள் கொண்டாட்டம்

ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி- ரசிகர்கள் கொண்டாட்டம் ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை மும்பையில் ரசிகர்கள் பட்டாசு, மத்தளங்களுடன் உற்சாகத்துடன் கொண்டாடினர். ‘ஜவான்’ திரைப்படம் வசூல் ரீதியான வெற்றி படம் என பார்வையாளர்கள் விமர்சனம்! காலை 6 மணிக்கு தொடங்கிய சிறப்புக் காட்சிகள் பார்வையாளர்களால் பெரிய கொண்டாட்டங்களாக மாறியது. தேசம் முழுவதும் ஷாருக் கானின் ‘ஜவான்’ திரைப்படத்தின் வெளியீட்டை பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தது. இந்த திரைப்படம் இறுதியாக…

Read More

குட் நைட்’ தயாரிப்பாளர்களின் அடுத்த பட அறிவிப்பு

பெரியஹீரோக்களின் படம் மட்டுமே தியேட்டர்களில் பெரிய வசூல் செய்யும் என்பதை மாற்றி விமர்சன ரீதியான வரவேற்பு மட்டுமின்றி நல்ல வசூலையும் பெற்று தமிழ்சினிமாவுக்கு நம்பிக்கையூட்டும் படமாக அமைந்தது குட்நைட். அப்படத்தைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் அடுத்தபடம் தயாராகிறது. இந்தப்படத்திலும் ஒரு புது இயக்குநர் அறிமுகமாகிறார்.பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கும் இந்தப் புதியபடத்தில் குட்நைட் மணிகண்டனே கதாநாயகனாக நடிக்கிறார். மாடர்ன்லவ் புகழ் ஸ்ரீகெளரி பிரியா கதாநாயகியாக…

Read More

ஷாருக்கின் ஜவான் பட முதல் பாடல், 24 மணி நேரத்தில் 46 மில்லியன் பார்வைகளைப் பெற்று வரலாற்று சாதனை படைத்து உள்ளது!!

ஒரே படத்தின் மூன்று மொழி வீடியோக்களும் YouTube ல் முதல் 3 இடங்களில் ஆதிக்கம் செலுத்தி உலகளவில் சாதனை படைத்துள்ளது, உண்மையில் இது இந்திய அளவில் மிகப்பெரும் சாதனையாகும். ஜவான், முதல் பாடல் ஹிந்தியில் ‘ஜிந்தா பந்தா’, தமிழில் ‘வந்த எடம்’ மற்றும் தெலுங்கில் ‘தும்மே துலிபேலா’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது ஒரு மகத்தான மைல்கல்லை எட்டியுள்ளது. வெளியான 24 மணி நேரத்திற்குள், இந்த பாடல்கள் டிஜிட்டல் உலகத்தை புயல் போல் தாக்கியது, YouTube…

Read More

“ஜவான்” திரைப்படத்திலிருந்து அடுத்ததாக யாருடைய கேரக்டர் போஸ்டர் வெளியாகும்?

கிங்கான் ஷாருக்கானின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆக்‌ஷன் எண்டர்டெய்னர் திரைப்படமான ‘ஜவான்’, ரசிகர்களின் உற்சாகத்தை புதிய உச்சத்திற்கு எடுத்து சென்றுள்ளது. சமீபத்தில் வெளியான விறுவிறுப்பான ப்ரிவ்யூ, மொட்டை தலையுடன் புது அவதாரத்தில் தோன்றும் SRK, அதிரடி அவதாரத்தில் காட்சியளிக்கும் நயன்தாராவின் கேரக்டர் போஸ்டரைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் இப்போது படத்தின் மற்றொரு புதிய கதாப்பாத்திரம் பற்றிய சிறு க்ளிம்ப்ஸ வெளியிட்டுள்ளனர். இந்த ஸ்னீக் பீக் ரசிகர்களிடம் அது யாராக இருக்குமென்ற பெரும் ஆவலை தூண்டியுள்ளது. ‘ஜவான்’ படத்தின் தயாரிப்பாளர்கள் தங்கள்…

Read More

ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படம் தென்னிந்திய பாக்ஸ் ஆபிஸில் ‘பதான்’ பட சாதனையை முறியடிக்கும்

சமீபத்தில் வெளியான ஷாருக்கானின் ஜவான் பட ப்ரிவ்யூ இந்த ஆக்‌ஷன் த்ரில்லர் சூப்பர்ஹிட்டாக மட்டுமல்லாமல் பல புதிய சாதனைகளைப் படைக்கும் என்பதைத் தெளிவாக நிரூபித்துள்ளது. அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன் தேசம் முழுவதிலும் இருந்து முன்னணி நட்சத்திர நடிகர்கள் பங்கு பெற்றிருக்கும் இப்படம் தான், சந்தேகத்திற்கு இடமின்றி இப்போதைய ஹாட் டாபிக். ஆனால் இது வெறும் ஆரம்பம் தான். பதான் மூலம் ஷாருக்கான் இந்தியத் திரை சாதனைகளில் தன் பெயரைப் பொறித்துள்ளார், ஜவான் அதை இன்னும் ஒரு படி…

Read More

ஷாருக்கானின் ஜவான் பிரிவியூ 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளை பெற்ற வீடியோவாக சாதனை படைத்திருக்கிறது

இந்திய திரைப்படத் துறையில் ஒரு திரைப்படத்தின் டீசர்கள் மற்றும் ட்ரெய்லர்கள் 24 மணி நேரத்தில் எவ்வளவு பார்வையை பெற்றிருக்கிறது என்ற எண்ணிக்கையின் அடிப்படையில், முந்தைய அனைத்து சாதனைகளையும் ஜவானின் வெளியீட்டுக்கு முந்திய வீடியோ எளிதாக முறியடித்திருக்கிறது. அனைத்து தளங்களிலும் 112 மில்லியன் பார்வைகளை பெற்ற வீடியோவாக அபிரிமிதமான சாதனைகளைப் படைத்து, தற்போதுள்ள வரையறைகளை உடைத்து, இந்திய திரைப்படத் துறைக்கு ஒரு புதிய உச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. முதல் 24 மணி நேரத்தில் அதிகளவில் பார்வையிடப்பட்ட வீடியோவாக ஜவானின்…

Read More