குஸ்பு ஒரு ஜோக்கர் – ரவுண்டு கட்டும் காயத்திரி

வடிவேல் ஒரு காமெடியில் சொல்லுவார் “என்னடா பொசுக்குன்னு அண்ணனை இப்டி பேசிப்புட்டனு ” அது மாதிரி ஒரு சம்பவம் நடந்துருக்கு,  அது என்ன பஞ்சாயத்து நா.. ??

கொரோனா தாக்கம் காரணமாக தற்போது மூன்றாவது கட்ட ஊரடங்கு தொடரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேரலையில் நேற்று இரவு உரையாற்றினார். அதெல்லாம் எங்களுக்கு தெரியும் புரியாடினாலும் புரிஞ்சமாறியே டிவி-யாண்ட உக்காந்துனு பாத்துனு தான் இருந்தோம்னு நீங்க நினைக்குறது எனக்கு கேக்குது, சரி நேர மேட்டருக்கு போயிரலாம், ஆக அப்போது அடுத்த கட்ட நகர்வுகள், நான்காவது ஊரடங்கு குறித்தெல்லாம் அவர் பேசினார். ஆனால் அவரது பேச்சு மற்றும் அறிவிப்புகள் குறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நடிகை குஷ்பு கிண்டலான விமர்சனங்களை தொடர்ந்து டுவீட் பண்ணிக்கொண்டே இருந்தார். ஒருகட்டத்தில் “ஆமா.. பிரதமர் எந்த மொழியில் பேசினார்..?, இந்தியாவின் பழம்பெரும் மொழி தமிழ். அதில் பேசாமல் எதற்கு ஹிந்தியில் பேசினார்” என்று கூட விமர்சித்தார்.

குஷ்புவின் கருத்துகளுக்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். தமிழகத்தில் பாஜகவில் அங்கம் வகிக்கும் நடிகை காயத்ரி ரகுராம் உடனடியாக குஷ்புவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.. “குஷ்பு ஒரு ஜோக்கர்.. பிரதமர் ஏன் தமிழில் பேசவில்லை என கேட்கிறார்.. பிரதமர் பேசியது தமிழ்நாட்டுக்கு மட்டும் அல்ல.. மொத்த இந்தியாவுக்கும் சேர்த்து தான்..” என கூறியுள்ளார்

எப்போதுமே குஷ்புவை அக்கா அக்கா என பாசமாக அழைத்து வந்த காயத்ரி ரகுராம் பிஜேபியில் சேர்ந்த பின்னர், இருவரும் எதிரெதிர் கட்சிகள் என்பதால் பாசத்தை எல்லாம் உத்தரவிட்டு ரவுண்டு கட்டுன சம்பவம் பெருசாஆகிப்போச்சு. அது சரி ஆல்ரெடி அக்கா சேரி வாசிக மாதிரி நடந்துக்காதீங்கனு சொன்னவங்க தானே !!

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here