தேவி 2 படம் ஒரு பார்வை

பேய் படங்கள் மக்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அந்த வகையில் எ எல் விஜய்யின் தேவி படத்தை தொடர்ந்து அடுத்த பாகமாக தேவி 2 படம் வெளியாகியுள்ளது.

கதைகளம்:
தேவி படத்தில் திருமணமான பிரபுதேவா தமன்னா ஜோடிக்கு கையில் குழந்தை உள்ளது. வேலை நிமித்தமாக இருவரும் மொரிஷியஸ் நாட்டுக்கு குடிபெயர்ந்து செல்கிறார்கள். வழக்கம் போல வாழ்க்கை செல்ல, தேவியில் ரூபியாக வந்து போன பேய் இன்னும் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது பிரபுதேவாவுக்கு. ஆனால் நடக்கிறதே வேற. முக்கியமாக ஒரு கட்டத்தில் பிரபுதேவா வேறொரு பெண்ணுடன் பழகுவதை பார்க்கின்ற தமன்னா அதிர்ந்து போவது மட்டுமில்லாமல் ஒன்றும் புரியாமல் குழம்பி போயிருக்கும் போது கோவை சரளாவின் உதவியை நாடுகிறார் தமன்னா. பிறகுதான் பிரபு தேவாவின் உடலில் இரண்டு பேய்கள் நுழைந்திருப்பது தமன்னாக்கு தெரியவருகிறது.அந்த பேய்களிடமிருந்து தன் கணவரையும் பாதுக்காக்க எப்படியெல்லாம் போராடுகிறார் என்பதையும் கடைசியில் கணவரை பேய்களிடமிருந்து மீட்டாரா என்பதே மீதிக்கதை.

பிரபுதேவா:
பிரபுதேவாவை இந்த வயதிலும் அதே இளமை துடிப்போடு இருக்கிறாரே என அவரை திரையில் பார்க்கும் போது நமக்கு தோன்றலாம். 2 ரூபங்களில் நடிப்பது கடினம். இருந்தாலும் அருமையாக கலக்கியிருக்கிறார், குறிப்பாக இரண்டிற்கும் கூலாக சேஞ்ச் ஓவர் காட்டியிருப்பது ஆச்சர்யம் என்றுதான் சொல்லவேண்டும். நடனம் சொல்லவே வேண்டாம் உங்களுக்கே தெரியும்.

தமன்னா:
தேவி படத்தில் படு கிளாமர் ஹீரோயினாக கலக்கிருந்தார். ஆனால் இன்று வெளியாகியுள்ள தேவி 2 வில் குடும்பத்து பெண்ணாக தன் நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். பேய்யிடம் மாட்டிக்கொண்டு அவர் படும் பாடு நமக்கு ஒரு நல்ல எண்டர்டெயின் மெண்ட்.

கோவை சரளா:
கோவை சரளா இந்த படத்தில் சந்தேகத்தில் இருக்கும் தமன்னாக்கு உதவி செய்யும் காட்சிகளும், பேய்யை டீல் பண்ணுவதில் என்று பல இடங்களில் ஸ்கோர் செய்துள்ளார். முக்கியமாக பேய்கே அக்ரீமெண்ட் போட்டு தமன்னாவும் இவரும் செய்யும் அட்டகாசங்கள் ரசிக்க வைக்கின்றது. இவரை போல் பிரபு தேவாவின் நண்பராக வரும் ஆர்.ஜே.பாலாஜி சின்ன ரோலில் தான் வருகின்றார். எந்த ஒரு விசயத்தையும் பிளான் பண்ணி பண்ணனும் என தமன்னா, சரளா போகும் போது குறுக்கே வந்து ஒரு வழியாக்கிவிடுகிறார் பாலாஜி. மொத்த குடும்பமும் பைத்தியமாகிடுச்சோ என பாலாஜி படும் கஷ்டம் நல்ல காமெடி.

தொழில்நுட்பம்:
ஒளிப்பதிவாளர் போஸ் தனது ஒளிப்பதிவின் மூலம் அழகான இடங்களை இன்னும் அழகாகவும், எதார்த்தமாகவும் தனது பணியை செய்துள்ளார். எடிட்டர் ஆண்டனியின் தெளிவான காட்சி அமைப்புகள் நம்மை பிரமிக்க வைக்கிறது.

இயக்குனர் ஏ.எல்.விஜய் தேவி படத்தில் நம்மை குஷியாக்கினார். அதைவிட தேவி 2 படத்திற்காக ஸ்கிரிப்டில் அதிக கவனம் செய்திருக்கிறார் என தெரிகிறது. மேலும், வழக்கமான கதையாக தான் இருக்கும் என நினைத்தவர்களுக்கு எதிர்பாராத சர்ப்பிரைஸ் வைத்திருக்கிறார்.

மொத்தத்தில் தேவி 2 கோடை விடுமுறையில் நல்ல பொழுதுபோக்கு திரைப்படம்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here