இரட்டை குழந்தைகளுக்குத் தந்தையானார் நடிகர் கவின்: திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்து மழை!
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கவின் மற்றும் அவரது மனைவி மோனிகா டேவிட் தம்பதியினருக்கு ஆண், பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இத்தகவலை நடிகர் கவின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

இரட்டிப்பு மகிழ்ச்சியில் கவின் குடும்பம்
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இச்செய்தியைப் பகிர்ந்துள்ள கவின்,
“எங்கள் வாழ்க்கையை இரட்டிப்பு மகிழ்ச்சியால் நிறைத்த இறைவனுக்கு நன்றி. எங்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளனர்”
எனக் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியின் சரவணன் மீனாட்சி தொடர் மூலம் அறிமுகமாகி, பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களின் இதயங்களைக் கவர்ந்தவர் கவின். தொடர்ந்து டாடா (Dada), ஸ்டார் (Star) போன்ற ஹிட் திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி வர்த்தக மதிப்பையும் ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கினார்.
திரையுலகினர் வாழ்த்து
கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது நீண்ட நாள் காதலியான மோனிகா டேவிட்டை கவின் கரம்பிடித்தார். தற்போது திருமணத்திற்குப் பிறகு இந்த தம்பதியினருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ள செய்தி வெளியானதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் ரசிகர்களும், திரையுலக நண்பர்களும், பிரபலங்களும் கவின் – மோனிகா தம்பதிக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.


































