யூடியூபர் இர்ஃபான் ஆரம்ப காலத்தில் ஆட்டோ ஓட்டியிருக்காரா!

மூணு வருஷமா ஆட்டோ ஓட்டிருக்கேன். ஸ்கூல் பசங்களை ஆட்டோல கூட்டி போய் விடுவேன். ஆம்னி வண்டியும் ஓட்டுவேன். இந்த வேலையை செஞ்சிட்டே காலேஜ்ல படிச்சேன். வாடகை குடுக்க கஷ்டப்பட்டிருக்கோம். – மளிகைக் கடை பொருட்களைக்கூட கடனில்தான் வாங்குவோம். சில நேரம் அந்தக் கடனையும் அடைக்க முடியாமல் போயிருக்கு. ஒரு விஷயத்துல தொடர்ந்து உழைச்சா முன்னேறலாம்னு நினைச்சேன். இறைவன் அருளால் இப்போ இந்த நிலைக்கு வந்திருக்கேன்.*

நெருக்கடிக்கு நடுவிலும் கனவைத் துரத்திய இர்ஃபான்: வாடகை கொடுப்பதற்கு சிரமப்பட்டிருக்கிறேன். மளிகைப் பொருட்களை வாங்குவதில் பொருளாதார நெருக்கடி இருந்திருக்கிறது. அனைத்தையும் சரி செய்ய உழைத்தால் மட்டுமே முடியும் என்பதில் உறுதியாக நம்பினேன்.

காலையில் ஆட்டோ ஓட்டுநர் மாலையில் கல்லூரி படிப்பு: அப்பா வேன் ஓட்டுநர். அவரிடம் ஆம்னி, ஆட்டோ ஆகிய வாகனங்கள் இருந்தது. அவர் குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் சென்றுவிடும் பணிகளைச் செய்து வந்தார். அவரைப் போலவே நானும் 3 வருடங்கள் ஆட்டோ ஓட்டினேன்.

இவ்வளவு பணம் சம்பாதிக்கலாம் எனத் தெரியாது’: யூடியூபில் இவ்வளவு பணம் சம்பாதிக்கலாம் என்பதும் எனக்கு அப்போது தெரியாது. நான் ஒரு நடிகராகியிருந்தாலும்கூட எனக்கு இவ்வளவு பெயர் கிடைத்திருக்காது என நினைக்கிறேன்.

அதிக பணிச்சுமை மன அழுத்தம் தந்திருக்கிறது; நான் நிறுவனங்களில் பணிபுரிந்தபோதுகூட இரண்டு நாட்கள் விடுமுறை கிடைக்கும். 5 நாட்கள் தினமும் 9 மணிநேரம் வேலை செய்துவிட்டு வார இறுதியில் ஓய்வெடுக்க முடியும். ஆனால் இந்தத் தொழிலில் விடுமுறை என்பதே கிடையாது.

திரைத்துறையினரும் எங்களை கவனிக்கிறார்கள்: சினிமா கலைஞர்களை யூடியூபில் பார்க்க வந்தவர்கள்தான் எங்களைப் போன்றவர்களையும் கவனிக்கத் தொடங்கினார்கள்.அரசியல் தலைவர்களுட நடனான நேர்காணல் சாத்தியமானது எப்படி? திமுக எம்.பி. கனிமொழியுடன் முதல் அரசியல் ல் நேர்காணல் செய்திருக்கிறேன். தூத்துக்குடியில் உணவுத்

திருவிழா நடந்தபோது என்னை அழைத்திருந்தார்கள். அங்கு அவருடன் தனியாக நேர்காணல் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.திமுக இளைஞரணி செயலர் உதயநிதியுடனும் நேர்காணல் அமைந்தது. ஆனால் அது அவர் நடித்த திரைப்படத்தையொட்டி எடுக்கப்பட்டது.
தேசிய படையாளிகள் விருது விழா குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
நான் அந்த நிகழ்ச்சியைப் பார்க்கவே இல்லை. எப்படியும் தமிழ்நாட்டில் யாருக்கும் கிடைக்காது எனத் தெரியும்.
இந்தி பேசும் மக்கள் இந்தியாவில் அதிகம். ஆனால் தமிழ் பேசுவோர் குறைவுதான்.
அதனால் அதிகம் இந்தி மொழியில் காணொளிகளை தயாரிக்கும் படைப்பாளிகளே இதில் பங்கெடுக்க
முடிகிறது. விருதுகளையும் வெல்ல முடிகிறது. இனி வரும் காலங்களில் இது எப்படி நடக்கிறது என்பதைப்
பார்க்கலாம்.பொறுப்புணர்வுடன் செயல்படுவது அவசியம்’ யூடியூப் காணொளிகளை குழந்தைகளும் அதிகளவில் விரும்பிப் பார்க்கிறார்கள் என்கிறபோது மிகுந்த பொறுப்புணர்வுடன் நாம் செயல்பட வேண்டியது அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *