‘வர்ஷங்களுக்கு சேஷம்’ படத்தில், தனித்துவமான நடிப்பின் மூலம் கவனத்தைக் கவரும் நிவின் பாலி

நிவின் பாலி, பிரணவ் மோகன்லால் மற்றும் தியான் ஸ்ரீனிவாசன் நடிப்பில் வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவான ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ ஏப்ரல் 11ஆம் தேதியன்று வெளியானது. இந்திய திரையுலகின் பரந்த பரப்பில் திறமையான நட்சத்திரங்களின் பங்களிப்பால் இந்த திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் குறிப்பாக நிவின் பாலியின் தனித்துவமான நடிப்பு.. கவனத்தை கவர்கிறது. ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ படத்தில் அவரது திரை தோற்றம்… அவர் ஆற்றல்மிக்க நடிகர் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. அத்துடன் மட்டுமல்லாமல்…

Read More

‘வார்2’ படத்தில் இருந்து ஜூனியர் என்.டி.ஆரின் முதல் தோற்றம் வெளியானது!

‘ஆர்.ஆர்.ஆர்.’ படம் மூலம் பான் இந்திய ரசிகர்களின் மனதைக் கவர்ந்த நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். இப்போது பாலிவுட்டிலும் மாஸாக அறிமுகமாகிறார். பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராஃப் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு ‘வார்’ திரைப்படம் வெளியானது. இதன் சீக்வல் ‘வார் 2’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில்தான் ஜூனியர் என்டிஆர் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். பாலிவுட்டின் முதல் படத்திலேயே வில்லனாக நடிக்கிறார். ஒய்ஆர்எஃப் ஸ்பை யுனிவர்ஸின் (YRF Spy Unvierse)…

Read More

திரு.மாணிக்கம் திரைப்படத்தின் பின்னணி இசைக் கோர்வை ஹைதராபாத்தில் தொடங்கியது

‘சீதா ராமம்’ படத்தின் மூலம் மொத்த இளைஞர்களையும் தன் இசையால் கவர்ந்த இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் தன் நவீன இசையால் எல்லாத் தரப்பினரையும் இந்தப் படத்தில் கவரவிருக்கிறார். பாடலாசிரியர்கள் சினேகன், ராஜூ முருகன், இளங்கோ கிருஷ்ணன் மற்றும் சொற்கோ ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். ‘ராஷ்மி ராக்கெட்’ என்ற இந்திப் படத்தின் கதை மூலம் மொத்த இந்தியாவையும் கவனம் ஈர்த்த இயக்குனர் நந்தா பெரியசாமி இந்தப் படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். கேரளாவைச் சேர்ந்த குமுளி, மூணாறு, மேகமலை,…

Read More

‘ராக்கிங் ஸ்டார்’ யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ராமாயணத்தை திரைப்படமாகத் தயாரிக்கிறது

பொழுதுபோக்கு துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நமித் மல்ஹோத்ராவின் தயாரிப்பு நிறுவனமான பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் எனும் நிறுவனமும், ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் எனும் நிறுவனமும் இணைந்து, இந்திய காவியமான இராமாயணத்தை வித்தியாசமான படைப்பு திறனுடன் இந்திய பார்வையாளர்களுக்கு மட்டுமுல்லாமல் சர்வதேச பார்வையாளர்களுக்காகவும் உருவாக்குகிறது. தொலைநோக்கு சிந்தனையைக் கொண்ட தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா பல அகாடமி விருதுகளை வென்ற விசுவல் எபெக்ட்ஸ் நிறுவனமான DNEG எனும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி…

Read More

பரம் இயக்கத்தில் டாலி தனஞ்செய் நடிக்கும் ‘கோடீ’

திரையுலக பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! டாலி தனஞ்செயா நடிக்கும் புதிய படத்திற்கு ‘கோடீ’ என பெயரிடப்பட்டு, டைட்டில் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. கன்னட தொலைக்காட்சியில் தனது புதிய சாதனைக்காக அறியப்பட்டவர் இயக்குநர் பரம். கலர்ஸ் கன்னட சேனலில் கன்னட மண்ணின் பாரம்பரிய கதைகளை வழங்குவதில் அவருக்கு இருந்த விரிவான அனுபவத்திலிருந்து கன்னட மண்ணின் சாரம்சம் நிறைந்த ஒரு கதையை இயக்குநர் பரம் எழுதி இருக்கிறார். யுகாதி பண்டிகையான இன்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘கோடீ’ படத்தின் தலைப்பு மற்றும்…

Read More

இயக்குநர் ஹரியின் குட்லக் ஸ்டூடியோஸ் இரண்டாம் ஆண்டு துவக்கம்

கமர்ஷியல் சினிமாவில் தனக்கென தனி பாணி அமைத்து தனது வெற்றி படங்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வரும் இயக்குநர் ஹரி, டப்பிங், படக்கோர்ப்பு (மிக்ஸிங்), மற்றும் படத்தொகுப்பு (எடிட்டிங்) உள்ளிட்ட போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை திரையுலகினர் சிறப்பாக மேற்கொள்வதற்காக அதிநவீன வசதிகள் கொண்ட குட்லக் ஸ்டுடியோஸை கடந்த வருடம் தொடங்கினார். கடந்த ஒரு வருடமாக மேற்கண்ட சேவைகளை திறம்பட வழங்கி வந்த குட்லக் ஸ்டுடியோஸ், இன்று இரண்டாம் ஆண்டுக்குள் வெற்றிகரமாக அடி எடுத்து வைத்துள்ளது. இதை கொண்டாடும்…

Read More

பார்த்திபனின் புதிய சாகச திரில்லர் திரைப்படம் ‘டீன்ஸ்’ டிரெய்லர் மற்றும் இசை புதுமையான முறையில் வெளியீடு

உலகிலேயே முதல் முறையாக திரையரங்குகளில் தணிக்கை சான்றிதழ் உடன் முதல் பார்வை வெளியிடப்பட்டு சாதனை படைத்த இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகளை மையமாகக் கொண்ட சாகச திரில்லரான ‘டீன்ஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் சென்னையில் சனிக்கிழமை அன்று வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்திற்காக இசை அமைப்பாளர் D. இமான் மற்றும் ஒளிப்பதிவாளர் காவ்மிக் ஆரி ஆகியோருடன் முதல் முறையாக இராதாகிருஷ்ணன் பார்த்திபன் இணைந்துள்ளார். ஆர். சுதர்சன் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். ‘டீன்ஸ்’ இசை வெளியீட்டு விழாவின் முக்கிய அம்சங்கள்…

Read More

ஹாட் ஸ்பாட் திரைப்பட வெற்றி விழாக் கொண்டாட்டம் மற்றும் நன்றி தெரிவிக்கும் விழா !!!

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசும் திரைப்படமாக உருவாகியிருந்த திரைப்படம் ஹாட் ஸ்பாட். மார்ச் 29 ஆம் தேதி வெளியான இப்படம் திரையரங்குகளில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் இப்படத்தின் வெற்றிவிழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில்.. எடிட்டர் முத்தையா பேசியதாவது… அப்பா அம்மா நண்பர்களுக்கு நன்றி. அடியே படத்திற்கு முன்பே கிடைத்த வாய்ப்பு இது. இந்தப்படத்திற்காக நிறையச் சண்டை போட்டிருக்கிறோம் ஆனால்…

Read More

‘புஷ்பா2: தி ரூல்’ டீசர் வெளியானது!!!

ரசிகர்களால் அதிகம் எதிர்ப்பார்க்கப்படும் படமான ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் டீசரை ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. டீசர் வெளியான உடனேயே இணையத்தை ஆக்கிரமித்ததோடு, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் டீசரை சிலாகித்து அல்லு அர்ஜூனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். பிரம்மாண்டம், வண்ணங்கள் மற்றும் மிகப்பெரிய பொருட்ச் செலவில் உருவாகியுள்ள காட்சிகள் அனைத்தும் டீசரில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. டீசரில் இடம்பெற்றுள்ள ஒவ்வொருக் காட்சியிலும் புஷ்பா ராஜ் நம்பமுடியாத,…

Read More

‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து, அனிமேஷன் அறிமுக வீடியோ வெளியாகவுள்ளது

பிரபல இயக்குநர் நாக் அஸ்வினின் சயின்ஸ் பிக்சன் பிரம்மாண்டமான ‘கல்கி 2898 AD’ படத்தின், பிரமாண்ட வெளியீட்டிற்காக பார்வையாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிக்கின்றனர். அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், மற்றும் திஷா பதானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப் படம், பார்வையாளர்களை காலத்தின் மீது ஒரு பரபரப்பான பயணத்திற்கு அழைத்துச் செல்லும். இப்படத்தின் மீது நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில், தற்போது இந்த பிரமாண்ட படைப்பிலிருந்து, ஒரு அற்புதமான…

Read More