அமேசான் பிரைம்மில் வெளியாக தயாராக இருக்கும் படங்கள் இதோ !!

என்னதான் சொல்லுங்க திரையரங்குல கை தட்டி விசிலடிச்சு பாக்குற மாறி வருமா ? என்று கெட்டவர்களும் இப்போது காலம் மாறி சின்னத்திரையில் படம் பார்க்க கற்றுக்கொண்டனர்.
இரண்டு தமிழ் திரைப்படங்கள் உட்பட மொத்தம் 7 புதிய திரைப்படங்கள் நேரடியாக மிகப்பெரிய OTT தளமான அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.

இப்போதெல்லாம், எவ்வளவு பெரிய திரைப்படங்களாக இருந்தாலும் திரையரங்குகளில் வெளியான ஓரிரு மாதங்களில் தொலைக்காட்சியிலும், OTT தளங்களிலும் வெளியாகிவிடுகிறது. அதற்கும் மேலாக, இப்போதெல்லாம் திரைப்படங்களையும், தொடர்களையும் நேரடியாக ஆன்லைனில் வெளியிட திட்டமிட்டெ எடுக்கப்படுகிறது. அதற்கு பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பும் கிடைத்து வருகிறது. இது சிறிய பட்ஜெட் படங்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நல்ல லாபமும் கிடைக்கிறது.

EYCAp8PWoAAsti
« of 6 »

கொரோனா வைரஸால் இந்த பூட்டுதல் அறிவிக்கட்ட நிலையில், கிட்டதட்ட 2 மாதங்களாக திரைப்பட வேலைகளைத் தொடங்கமுடியாமலும், திரையங்குகள் மால்கள் அனைத்து மூடப்பட்டிருப்பதால் எடுத்து முடிக்கப்பட திரைப்படங்களையும் வெளியிடமுடியாமல் தயாரிப்பாளர்கள் அவதிப்பட்டு வந்தனர்.

கடந்த மாதம், ஜோதிகா நடிப்பில் சூர்யாவின் 2D Entertainment தயாரித்த ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் என்ற செய்தி வளியானபோது. திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்திலிருந்து எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால், தற்போது அதுபோன்ற சில அதடைகளைக் கடந்து பல திரைப்படங்கள் இணையதளங்களில் நேரடியாக வெளியாகிறது. அவற்றின் விவரம் கீழே..,

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் அவற்றின் வெளியீட்டுத் தேதிகள்:

ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்” – மே 29

கீர்த்தி சுரேஷின் ‘பென்குயின்’ –  ஜூன் 19

குலாபோ சிதாபோ (ஹிந்தி) – ஜூன் 12

‘லா’ Law (கன்னடம்) – ஜூன் 26

ஃப்ரென்ச் பிரியானி (கன்னடம்) – ஜூலை 24

சுஃபியும் சுஜாதையும் (மலையாளம்)விரைவில் தேதி குறிப்பிடப்படவுள்ளது.

சகுந்தலா தேவி (ஹிந்தி)விரைவில் தேதி குறிப்பிடப்படவுள்ளது.

மேலும், அமேசான் பிரைம் அதன் ஒரிஜினலான Paatal Lok எனும் ஹிந்தி வலைதள தொடரையும் இன்று வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here