அருள்வான் தமிழ் திரைப்பட விமர்சனம்

அருள்வான் (2026) – முன்னோட்டம்

இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில், அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன் மற்றும் குழந்தை நட்சத்திரம் கிருத்திகா நடிப்பில் ஜூலை 2026-ல் வெளியாகியுள்ள சமூக உணர்வுப்பூர்வமான திரைப்படம் ‘அருள்வான்’. வழக்கமான த்ரில்லர் கதைகளைத் தேர்ந்தெடுக்கும் அருள்நிதி, இந்த முறை முற்றிலும் மாறுபட்ட ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தைக் கையாண்டுள்ளார்.

அருள்வான் கதை

1990-களின் பின்னணியில், ஒரு தொலைதூர மலைக் கிராமத்தில் வாழும் பழங்குடியின மக்களின் வாழ்வியலையும், அங்குள்ள ‘குறிஞ்சி’ (கிருத்திகா) என்ற சிறுமியின் கல்விப் போராட்டத்தையும் பேசுகிறது இத்திரைப்படம். கல்வியின் அவசியத்தை உணர்த்திய தாத்தாவின் மரணத்திற்குப் பிறகு, எப்படியாவது படிக்க வேண்டும் என்று துடிக்கும் குறிஞ்சி, தனது கிராமத்திற்கே ஒரு அரசுப் பள்ளியைக் கொண்டு வர மாவட்ட ஆட்சியரை (கலெக்டர்) சந்திக்க முயற்சிக்கிறாள்.

அதே நேரத்தில், தேனி மாவட்டத்தின் நேர்மையான கலெக்டராக வரும் முத்துவேல் (அருள்நிதி), இந்த மலைவாழ் மக்களின் மேம்பாட்டிற்காக களமிறங்குகிறார். அந்தச் சிறுமியின் கல்விப் போராட்டத்திற்கு இந்த மாவட்ட ஆட்சியர் எவ்வாறு துணை நின்றார், கிராமத்திற்கு பள்ளி கிடைத்ததா இல்லையா என்பதே அருள்வானின் உணர்வுப்பூர்வமான கதை.

‘அருள்வான்’ என்பது வெறும் பொழுதுபோக்குத் திரைப்படம் மட்டுமல்ல, மலைவாழ் மக்களின் கல்வி உரிமையை அழுத்தமாகப் பேசும் ஒரு நேர்மையான படைப்பு. குடும்பத்துடன் தியேட்டரில் பார்க்க வேண்டிய ஒரு அழகான எமோஷனல் டிராமா!

Read Also: Love Oh Love Movie Review

படத்தில் சிறப்பானவை

➡கதைக்கரு
➡அருள்நிதி மாறும் குழந்தை நட்சத்திரம் கிருத்திகாவின் அட்டகாசமான நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡பிரசங்கம் இல்லாத திரைக்கதை
➡டெக்னிக்கல் தரம்
➡ஜி.வி.பிரகாஷின் ஆன்மார்த்தமான பின்னணி இசை
சுகுமாரின் ஒளிப்பதிவு மலைக் கிராமத்தின் அழகையும், மக்களின் வறுமையையும் திரையில் தத்ரூபமாகக் காட்டியுள்ளது.

படத்தில் கடுப்பானவை

➡மெதுவான முதல் பாதி
➡முன்னரே கணிக்கக்கூடிய சில காட்சிகள்

ரேட்டிங்: ( 3.25 / 5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைஐ, நோபடி தமிழ் திரைப்பட விமர்சனம்