Bakrid Movie (2019) | Cast and Review

நடிகர் விக்ராந்த் நடிப்பில் பக்ரீத் திருநாள் அன்று வரவிருந்த பக்ரீத் படத்தினுடைய திரை விமர்சனத்தை பார்க்கலாம்.

விக்ராந்த் ஒரு நலிந்த விவசாயாக வங்கியில் விவசாய கடன் வாங்க செல்கிறார். அப்போது நீங்கள் முதல் போட்டு முதலில் ஆரம்பிக்க வேண்டும் அதன் பின் லோன் வாங்கி தருகிறேன் என்று பேங்க் மேனேஜர் சொல்ல, பணத்திற்காக தான் நண்பனுக்கு தெரிந்த மனிதரை பார்க்க செல்கிறார்கள். அங்கு பக்ரீத் திருநாள் வருகிறது என்பதால் ஒட்டகம் இருக்கிறார்கள். அந்த பெரிய ஒட்டகத்துடன் அதன் குட்டி ஒட்டகமும் வந்து இறங்க என்ன செய்வது என்று புரியாமல் நிற்கும் வீட்டின் உரிமையாளர். அந்த சமயத்தில் குட்டி ஒட்டகத்தை பார்த்தவுடனே இணைபிரியாத ஒரு பாசம் விக்ராந்துக்கு வருகிறது. அந்த ஒட்டகத்தை நான் எடுத்துகிறேன் என்று சொல்லி தன் வீட்டுக்கு எடுத்து செல்ல, ஒட்டகம் (சாரா) வீட்டில் ஒரு ஆளாக வளர்கிறது . இதன் பின்பு விக்ராந்த் என்ன மாதிரியான விஷயங்களை சந்திக்கிறார். ஒட்டகம் (சாரா) விற்காக எவ்வளவு தூரம் தன் வாழக்கையை பயணிக்கிறார் என்பதை அபாரமான பாசத்துடன் ஒரு அழகான படைப்பை நமக்கு தந்துள்ளார்.

படத்தை பற்றிய அலசல்
படத்தின் ஆரம்பத்தில் ஒரு நலிந்த விவசாயாக பிரதிபலித்துள்ளார் நடிகர் விக்ராந்த் (ரத்தினம்). என்னதான் 4 வருடங்களுக்கு பிறகு கிடைக்கும் சொத்து என்றாலும் அதில் விவசாயம் செய்ய வேண்டும் என்ற குறிக்கோள் வரவேற்கதக்கது. விவசாயம் செய்த பிறகு செழிப்போடு இருக்கும் போதும், நலிந்த விவசாயாக இருக்கும் போதும் காட்டிய வித்தியாசம் சிறப்பு. விக்ராந்துக்கு மனைவியாக நடித்த வசுந்தரா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவர்களுக்கு மகளாக நடித்துள்ளவரும் நடிப்பில் எல்லோரையும் பின்னுக்கு தள்ளியுள்ளார். மேலும், படத்தில் நடித்த எல்லோரும் அவர்களுடைய அற்புதமான நடிப்பை வெளிக்கொணர்த்துள்ளர்னர்.

படத்தில் வசனங்கள் அங்கங்கே தாக்கத்தை எற்படுத்தியுள்ளது. குறிப்பாக விவசாயத்தை அடுத்த தலைமுறை பார்க்கவா போகிறார்கள் என்பதும், அதே போல் கடன் கேட்கும் இடத்தில், நாங்க பக்ரித்க்கு பிரியாணி போட்ட 600 பேரு சாப்பிடுவாங்க. ஆனா, நீங்க விவசாயம் செய்தால் பல பேருக்கு சோறு போடுவிங்க போன்ற இன்னும் சில வசனங்கள் நம்மை யோசிக்க வைக்கின்றது.

காட்சி படுத்திய விதத்தில் எல்லோரும் பிடித்த காட்சியாக நிறைய இருந்தாலும், குறிப்பாக தன் குழந்தை (lasy) வேண்டும் என்றும் அடம்பிடிருக்கிறது என்பதற்காக வாங்கி கொடுத்தாலும். கடைசியில் வீட்டுக்கு வந்ததற்கு பிறகு விக்ராந்த் மற்றும் வசுந்தரா எப்படி அவர்களது மகளின் மனநிலையை மாற்றுகிறார்கள் என்பதையும் lasyக்கு மகள் அடம்பிடிப்பது வழக்கமான ஒன்றாகத்தான் இருக்கிறது என்பதற்கு வீட்டில் நொறுக்கு தீனி போடும் கூடை சாட்சியாக உள்ளது. இப்படி படத்தில் பல காட்சிகள் அருமையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது படத்தின் பலமாக உள்ளது.
D இமான் இசை மற்றும் பின்னணி இசையில் நம்மை பிரமிக்க வைக்கிறார். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் படத்தின் இரண்டாவது நாயகன் D இமான். எத்தனயோ படத்தில் ராஜஸ்தான் மற்றும் வடஇந்தியாவை நாம் பார்த்திருக்கலாம். ஆனா, இந்த படத்தில் கதையோடு நான் பார்க்கும் போது ஒரு விதமான மென்மையான, அழகூட்டக்கூடிய காட்சிகளாவே அமைந்துள்ளது. படத்தின் கதையை பெரிதாக நீட்டிக்காமல் திரைக்கதை மூலம் 2 மணிநேரம் படத்தின் தொகுப்பை எவ்வளவு எளிதாக முடிக்க முடியுமோ அவ்வளவு அருமையாக முடித்துள்ளார் இப்படத்தின் எடிட்டர் ரூபன்.

விலங்குகள் பிடித்த மனிதர்கள், குடும்பத்தோடு போய் படம் பார்க்கவேண்டும் என்று நினைப்பவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய படம் பக்ரீத்.

படத்தின் பலம் :
விக்ராந்த் மற்றும் நடிகர், நடிகைகள் நடிப்பு. பிண்ணனி இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என அனைத்தும் தரம்.

மொத்தத்தில் சினிமாவுக்கு உண்டான மசாலா விஷயங்கள் இல்லாமல் கதையை ஹீரோவாக வலம் வந்திருக்கும் படம்தான் பக்ரீத்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *