BOO’ மே 27, 2023 இன்று ஜியோ சினிமாவில் உலகளாவிய OTT ப்ரீமியராகிறது

இந்தியத் திரையுலகின் மிகவும் பிரபலமான திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான விஜய், தனது தனித்துவமான கதைகளுடன் மதிப்புமிக்க திரைப்படங்களை உருவாக்குவதில் நம்மை ஆச்சரியப்படுத்த தவறுவதில்லை. ‘ஜாக் ஆஃப் ஆல் ஜானர்ஸ்’ என்று கருதப்படும் அவரது பன்முகத் திறமை, கதைசொல்லல், இயக்குநரின் திறமை மற்றும் அவர் திரைப்படங்களை முன்வைக்கும் விதம் இவை எல்லாம் ரசிகர்களை கவரும் விதத்தில் உள்ளது. அருண் விஜய் நடிப்பில், விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மிஷன் சாப்டர் -1’ திரைப்படம் விரைவில் உலகளவில் திரையரங்குகளில் வெளியிட தயாராக உள்ள நிலையில், நாளை (மே 27, 2023) அவரது ‘BOO’ என்ற த்ரில்லர் படம் நேரடி ஓடிடி பிரீமியராக ஜியோ சினிமாவில் வெளியாக இருக்கிறது. ஜோதி தேஷ்பாண்டே, ராமாஞ்சனேயுலு ஜவ்வாஜி மற்றும் எம்.ராஜசேகர் ரெட்டி ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இயக்குநர் விஜய் கூறும்போது, ​​“இந்தப் படம் கோவிட்-19 இரண்டாம் அலையின் போது உருவானது. இந்தப் படத்திற்காக நான் நடிகர்களை அணுகியபோது, ​​​​அவர்கள் இந்தப் படத்தில் நடிக்க உடனே ஒப்புக்கொண்டனர். படப்பிடிப்பின் போது நாங்கள் பல கோவிட் நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டியிருந்தது மற்றும் நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் முற்றிலும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தோம். இந்தத் படத்தை நம்பித் தயாரிக்க முன்வந்த எனது தயாரிப்பாளர்களான திரு.ராமாஞ்சனேயுலு மற்றும் எம்.ராஜசேகர் ரெட்டி ஆகியோருக்கு நன்றி. மேலும், நாட்டின் மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஜியோ ஸ்டுடியோஸூடன் இணைந்ததற்காகவும் அவர்கள் ‘BOO’ படத்தின் உரிமையை பெற்றதற்காகாவும் நான் நன்றி கூறுகிறேன். விஸ்வக் சென், ரகுல் ப்ரீத் சிங், நிவேதா பெத்துராஜ், மேகா ஆகாஷ், ரெபா மோனிகா ஜான், மஞ்சிமா மோகன் மற்றும் படக்குழுவினர் அனைவரும் இவ்வளவு பெரிய ஆதரவை அளித்ததற்கு நன்றி. தொழில்நுட்ப வல்லுனர்களின் பங்களிப்புடன் இந்தப் படம் ஒரு முழுமையான வளர்ச்சியைப் பெற்றது. ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையும், சந்தீப்பின் ஒளிப்பதிவும், ஆண்டனியின் படத்தொகுப்பும் இந்தப் படத்தில் மிகப்பெரிய ஈர்ப்பாக இருக்கும்.  (மே 27, 2023) வெளியாகும் ‘BOO’ படத்திற்கு உலகளாவிய பார்வையாளர்களின் ரெஸ்பான்ஸை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறோம்.

‘BOO’ படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சர்வந்த் ராம் கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்ரீ ஷ்ரிதி சாய் மூவிஸ் தயாரித்திருக்க விஜய் எழுதி இயக்கியுள்ளார். ரகுல் ப்ரீத் சிங், விஷ்வக் சென், நிவேதா பெத்துராஜ், மேகா ஆகாஷ், ரெபா மோனிகா ஜான், மஞ்சிமா மோகன் மற்றும் வித்யா ராமன் ஆகியோர் இதில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு சந்தீப் கே விஜய், படத்தொகுப்பு ஆண்டனி. ‘ஸ்டண்ட்’ சில்வா ஆக்‌ஷன் காட்சிகளை அமைத்துள்ளார். சரவணன் வசந்த் கலைப் படைப்புகளை கவனித்துள்ளார். மது ஆர் பின்னணி இசையையும், இக்பால் ஒலி வடிவமைப்பையும், டி. உதயகுமார் ஒலிப்பதிவையும் செய்துள்ளார்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here