‘யாஷ் 19’ படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு டிசம்பர் 8, 2023 அன்று வெளியாகிறது

‘கே.ஜி.எஃப்’ – I & II, படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, ராக்கிங் ஸ்டார் யாஷ் இந்தியாவில் திரை ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் திரைப்பட நட்சத்திரங்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். படத்தின் அனைத்து அம்சங்களிலும் வெளிப்படும் அவரது ஈடுபாடு, படத்தின் மீதான அவரது அர்ப்பணிப்பு மேலும் தனது பன்முக திறமையால் அனைவரையும் கவர்ந்திழுக்கும் விதம் என, ரசிககர்கள் கொண்டாடும் நட்சத்திரமாக கொடி நாட்டினார். ஆனால் ‘கே.ஜி.எஃப்: பார்ட் 2’ இன் மாபெரும் வெற்றிக்கு பிறகு, ஒரு வருடத்திற்கும் மேலாக,…

Read More

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது

சமீபகாலமாக வெற்றிப் படங்களை கொடுத்து மகிழ்ச்சியில் இருக்கும் நடிகர் விஜய் சேதுபதி முதன்முறையாக இயக்குனர் மிஷ்கினுடன் கைகோர்த்தி உள்ளார். ட்ரெயின் (Train) திரைப்படத்தை தமிழ்த் திரையுலகின் மாபெரும் வெற்றி படங்களை கொடுத்த பிரம்மாண்ட தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு இந்த ட்ரெயின் (Train) படத்தை தயாரிக்கிறார். இந்த கதை ஒரு ரயில் பயணத்தில் நடைபெறும் அதிரடி திகில் நிறைந்த கதை என கூறப்படுகிறது, எனவே ட்ரெயின் (Train) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்காக விஜய் சேதுபதி வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார்,…

Read More

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் ‘அன்னபூரணி’ படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் கிடைத்துள்ளது!

அதிக அளவிலான பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு கொண்டு வருவதில்தான் ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படங்களின் வெற்றி உள்ளது. இந்தத்தரம் கொண்ட திரைப்படங்கள் நகரங்கள், புறநகர்ப் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் தொடர்ந்து அமோக வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த வரிசையில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’அன்னபூரணி’ திரைப்படம் சிபிஎஃப்சியின் ‘யு’ சான்றிதழைப் பெற்று, ஒட்டுமொத்த படக்குழுவினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிறந்த தொழில்நுட்பத் தரத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்க, ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் & டிரிடெண்ட்…

Read More

“அனிமல்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு

“அனிமல்”  திரைப்படம்,  டிசம்பர் 1, 2023 அன்று தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையொட்டி படக்குழுவினர் இந்தியா முழுதும் புரமோசன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று சென்னையில் படக்குழுவினர், தமிழ்ப்பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில், பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து உரையாடினர். இந்நிகழ்வினில்.. தயாரிப்பாளர் பூஷன் குமார் கூறியதாவது.. இது சந்தீப் வங்காவின் படம், அவருடன் கபீர் சிங் படத்தில் இணைந்து வேலை பார்த்தோம். அவர் இந்தக்கதையைச் சொன்ன போது,…

Read More

விஷ்ணு மஞ்சுவின் பிறந்தநாளில் வெளியான ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

விஷ்ணு மஞ்சுவின் பிறந்தநாளோடு, இந்திய சினிமாவே எதிர்பார்க்கும் திரை காவியமாக உருவாகும் ‘கண்ணப்பா’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் கொண்டாடும் ரசிகர்கள்! நடிகர் விஷ்ணு மஞ்சுவின் கனவு திரைப்படமான ‘கண்ணப்பா’ படம் அறிவிக்கப்பட்ட நாள் முதல், அதன் ஒவ்வொரு தகவல்களும் ரசிகர்களை மட்டும் இன்றி திரையுலகினரையும் பெரும் ஆர்வத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில், இந்திய சினிமாவின் மிக முக்கியமான திரைப்படங்களின் வரிசையில் இணைந்திருக்கும் கண்ணப்பா படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவராலும் படத்தின் மீதான…

Read More

நவம்பர் 24 ஆம் தேதி வெளியாகிறது “குய்கோ” திரைப்படம்

எ.எஸ்.டி பிலிம்ஸ் எல்.எல்.பி வழங்கும் திரைப்படம் குய்கோ. இதில் கதையின் நாயகர்களாக விதார்த் மற்றும் யோகி பாபு நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் இளவரசு, முத்துகுமார், பிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஆண்டவன் கட்டளை படத்தின் கதாசிரியர் அருள் செழியன், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். பிரபல பின்னணி பாடகர் அந்தோணி தாசன் இப்படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு…

Read More

“அவள் பெயர் ரஜ்னி” டிரெய்லர்  வெளியீட்டு விழா !!

நவரசா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் “அவள் பெயர் ரஜ்னி” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். தயாரிப்பாளர் ஸ்ரீஜித் K.S  பேசியதாவது… எல்லோருக்கும் என் நன்றிகள் ஒரு நல்ல படம் செய்துள்ளோம் ஆதரவு தாருங்கள். எங்களுக்காக வந்துள்ள இயக்குநர் லோகேஷ் அவர்களுக்கு நன்றி….

Read More

“ஆலகாலம்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

ஒரு தாயின் கனவை நனவாக்க முயலும் இளைஞனின் வாழ்க்கை, சமூகத்தால் சீரழிய அவனை மீட்க, அவனது தாயும் காதலியும் போராடுகிறார்கள். அந்த இளைஞன் மீண்டானா? வாழ்வின் ஜெயித்தானா ? தாயின் கனவு நிறைவேறியதா என்பதே இப்படம். இன்று வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக், தனித்துவமானதாக இருப்பதுடன், வித்தியாசமான திரை அனுபவமாக இப்படம் இருக்குமென்பதை உறுதி செய்கிறது. மேலும் பார்வையாளர்களிடம் நல்ல பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. காலா படத்தில் ரஜினி ஜோடியாக நடித்த ஈஸ்வரி ராவ் இப்படத்தில் தாயாக முதன்மை…

Read More

ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘ரெபல்’ படத்தின் டீசர் வெளியீடு

‘ரெபல்’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா அவருடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார். வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ‘ரெபல்’ படத்தின் டீசர் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் ‘ரெபல்’. இதில் ஜீ. வி. பிரகாஷ் குமார், மமிதா பைஜூ, கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், ‘கல்லூரி’ வினோத்,…

Read More

ஜப்பான் படம் குறித்து மனம் திறந்த கார்த்தி

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜப்பான்’. கார்த்தியின் 25வது படமாக உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் ராஜு முருகன் இயக்கியுள்ளார். வரும் தீபாவளி பண்டிகை கொண்ட்டாட்டமாக நவ-10ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் கார்த்தி, கடந்த 20 வருட திரையுலக பயணத்தில் பத்திரிகையாளர்கள் தனக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருவதற்கு நன்றி தெரிவித்தார்.. இந்த நிகழ்வில் நடிகர் கார்த்தி பேசும்போது, “ஒவ்வொரு முறை படம் பார்த்துவிட்டு நீங்கள்…

Read More