விஷ்ணு மஞ்சுவின் பிறந்தநாளில் வெளியான ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

விஷ்ணு மஞ்சுவின் பிறந்தநாளோடு, இந்திய சினிமாவே எதிர்பார்க்கும் திரை காவியமாக உருவாகும் ‘கண்ணப்பா’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் கொண்டாடும் ரசிகர்கள்! நடிகர் விஷ்ணு மஞ்சுவின் கனவு திரைப்படமான ‘கண்ணப்பா’ படம் அறிவிக்கப்பட்ட நாள் முதல், அதன் ஒவ்வொரு தகவல்களும் ரசிகர்களை மட்டும் இன்றி திரையுலகினரையும் பெரும் ஆர்வத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில், இந்திய சினிமாவின் மிக முக்கியமான திரைப்படங்களின் வரிசையில் இணைந்திருக்கும் கண்ணப்பா படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவராலும் படத்தின் மீதான…

Read More

நவம்பர் 24 ஆம் தேதி வெளியாகிறது “குய்கோ” திரைப்படம்

எ.எஸ்.டி பிலிம்ஸ் எல்.எல்.பி வழங்கும் திரைப்படம் குய்கோ. இதில் கதையின் நாயகர்களாக விதார்த் மற்றும் யோகி பாபு நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் இளவரசு, முத்துகுமார், பிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஆண்டவன் கட்டளை படத்தின் கதாசிரியர் அருள் செழியன், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். பிரபல பின்னணி பாடகர் அந்தோணி தாசன் இப்படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு…

Read More

“அவள் பெயர் ரஜ்னி” டிரெய்லர்  வெளியீட்டு விழா !!

நவரசா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் “அவள் பெயர் ரஜ்னி” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். தயாரிப்பாளர் ஸ்ரீஜித் K.S  பேசியதாவது… எல்லோருக்கும் என் நன்றிகள் ஒரு நல்ல படம் செய்துள்ளோம் ஆதரவு தாருங்கள். எங்களுக்காக வந்துள்ள இயக்குநர் லோகேஷ் அவர்களுக்கு நன்றி….

Read More

“ஆலகாலம்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

ஒரு தாயின் கனவை நனவாக்க முயலும் இளைஞனின் வாழ்க்கை, சமூகத்தால் சீரழிய அவனை மீட்க, அவனது தாயும் காதலியும் போராடுகிறார்கள். அந்த இளைஞன் மீண்டானா? வாழ்வின் ஜெயித்தானா ? தாயின் கனவு நிறைவேறியதா என்பதே இப்படம். இன்று வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக், தனித்துவமானதாக இருப்பதுடன், வித்தியாசமான திரை அனுபவமாக இப்படம் இருக்குமென்பதை உறுதி செய்கிறது. மேலும் பார்வையாளர்களிடம் நல்ல பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. காலா படத்தில் ரஜினி ஜோடியாக நடித்த ஈஸ்வரி ராவ் இப்படத்தில் தாயாக முதன்மை…

Read More

ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘ரெபல்’ படத்தின் டீசர் வெளியீடு

‘ரெபல்’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா அவருடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார். வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ‘ரெபல்’ படத்தின் டீசர் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் ‘ரெபல்’. இதில் ஜீ. வி. பிரகாஷ் குமார், மமிதா பைஜூ, கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், ‘கல்லூரி’ வினோத்,…

Read More

ஜப்பான் படம் குறித்து மனம் திறந்த கார்த்தி

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜப்பான்’. கார்த்தியின் 25வது படமாக உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் ராஜு முருகன் இயக்கியுள்ளார். வரும் தீபாவளி பண்டிகை கொண்ட்டாட்டமாக நவ-10ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் கார்த்தி, கடந்த 20 வருட திரையுலக பயணத்தில் பத்திரிகையாளர்கள் தனக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருவதற்கு நன்றி தெரிவித்தார்.. இந்த நிகழ்வில் நடிகர் கார்த்தி பேசும்போது, “ஒவ்வொரு முறை படம் பார்த்துவிட்டு நீங்கள்…

Read More

தீபாவளி விருந்தாக விக்ரம் பிரபுவின் ‘ரெய்டு’ திரைப்படம் வெளியாகிறது!

நடிகர் விக்ரம் பிரபு நடித்த ஆக்ஷன் கமர்ஷியல் ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படமான ’ரெய்டு’ நவம்பர் 10, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை கார்த்தி இயக்கியுள்ளார் மற்றும் இயக்குநர் முத்தையா வசனம் எழுதியுள்ளார். இப்படத்தை எம் ஸ்டுடியோஸ், ஓப்பன்ஸ்கிரீன் பிக்சர்ஸ் மற்றும் ஜி பிக்சர்ஸ் ஆகியவற்றிற்காக தயாரிப்பாளர்கள் கே கனிஷ்க் & ஜிகே @ ஜி.மணிகண்ணன் ஆகியோர் தயாரித்துள்ளனர். இயக்குநர் கார்த்தி படத்தின் கதை குறித்து சொன்னபோது அதில் ஆக்‌ஷன், எமோஷன், காதல்,…

Read More

“டங்கி” திரைப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன!!

கிங்கான் ஷாருக்கின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட, “டங்கி டிராப் 1” உண்மையில் பார்வையாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒரு முழுமையான விருந்தாக அமைந்தது. உண்மையில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படைப்பு, நட்பு மற்றும் அன்பை ஒருங்கிணைக்கும் அதி அற்புதமான கதையை மனதை மயக்கும் வகையில் சொல்கிறது. “டங்கி” படத்தின் ஐந்து முக்கிய கதாப்பாத்திரங்களான ஷாருக்கான், டாப்ஸி பன்னு, விக்ரம் கோச்சார், அனில் குரோவர் மற்றும் விக்கி கௌஷல் ஆகியோர் இடம்பெற்றுள்ள இரண்டு அழகான போஸ்டர்களை தயாரிப்பாளர்கள் நேற்று வெளியிட்டுள்ளனர்….

Read More

காதல்- த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள சென்சேஷனல் தமிழ் திரைப்படம் ‘சில நொடிகளில்’!

வினய் பரத்வாஜ் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, ராஜ் வரதனாக முன்னணி கதாபாத்திரத்திலும், புன்னகை பூ கீதா மேதா வரதனாகவும், யாஷிகா ஆனந்த் மாயா பிள்ளை என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மிஸ்ட்ரி, சஸ்பென்ஸ், எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட இந்தப் படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு சிறந்த திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கும். ‘திரெளபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படங்களுக்குப் பிறகு ரசிகர்கள் இதுவரை பார்த்திராத முற்றிலும் புதிதான ஒரு கதாபாத்திரத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிக்கிறார். லண்டனில் இருக்கக் கூடிய ஸ்டைலிஷான ஒரு காஸ்மெட்டிக்…

Read More

ஆஸ்கார் விருதுக்கான நடிகர்களின் பிரத்யேக குழுவில் இடம் பிடித்த ‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண்

அகாடமி விருதுகள் எனப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்குவதற்கான மற்றும் அதனை மேற்பார்வையிடும் பொறுப்பு மிக்க அமைப்பான அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ் குழுவில், ‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் இணைந்திருக்கிறார். அகாடமி ஆஃப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ் அண்மையில் புகழ்பெற்ற பான் இந்திய சூப்பர் ஸ்டாரான ராம்சரண், மதிப்புமிக்க நடிகர்களின் பட்டியலில் இணைக்கப்பட்டிருக்கிறார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. சினிமா துறையில் அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புக்காக கொண்டாடப்படும் வகையில் ராம் சரண் ஆஸ்கார்…

Read More