“ஆலகாலம்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

ஒரு தாயின் கனவை நனவாக்க முயலும் இளைஞனின் வாழ்க்கை, சமூகத்தால் சீரழிய அவனை மீட்க, அவனது தாயும் காதலியும் போராடுகிறார்கள். அந்த இளைஞன் மீண்டானா? வாழ்வின் ஜெயித்தானா ? தாயின் கனவு நிறைவேறியதா என்பதே இப்படம்.

இன்று வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக், தனித்துவமானதாக இருப்பதுடன், வித்தியாசமான திரை அனுபவமாக இப்படம் இருக்குமென்பதை உறுதி செய்கிறது. மேலும் பார்வையாளர்களிடம் நல்ல பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

காலா படத்தில் ரஜினி ஜோடியாக நடித்த ஈஸ்வரி ராவ் இப்படத்தில் தாயாக முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். ஜெயகி, சாந்தினி ஆகியோர் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் தீபா, தங்கதுரை, சிசர் மனோகர், கோதண்டம் உட்படப் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப குழு விபரம்
தயாரிப்பு –
இயக்கம் – ஜெயகி
ஒளிப்பதிவு – K. சத்யராஜ்
இசை – NR. ரகுநந்தன்
எடிட்டர் – MU. காசி விஸ்வநாதன்
கலை இயக்கம் – தேவேந்திரன்
நடன இயக்குநர் – பாபா பாஸ்கர், அசார்
ஸ்டன்ட் – ராம்குமார்
டிசைன்ஸ் – என் டாக்கீஸ்
டிஐ & விஷுவல் எஃபெக்ட்ஸ் – வர்னா டிஜிட்டல் ஸ்டூடியோஸ்

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here