ராஜீவ் கோவிந்த் கதாநாயகனாக நடிக்கும் டெக்ஸ்டர்

தன் காதலி யாமினியை யாரேனும் கேலியாகவோ
கிண்டலாகவோ அல்லது அவள் கண்கள் கலங்கும் படி நடந்து கொண்டால் எவனாக இருந்தாலும் அது எமனாக இருந்தாலும் அவர்களை அடித்து துவம்சம் செய்பவன் யாமினியின் காதலன் ஆதி.தன் மீது தன்மீது பாசமாக இருக்கும் ஆதியை கண்டு பெருமைபட்டாலும் இன்னொரு பக்கம் தன்னால் இவனுக்கு எந்த ஒரு ஆபத்தும் வரக்கூடாது என்று புரியவைத்து உடனே நாம் திருமணம் செய்துக்கொண்டு சந்தோஷம்மாக வாழலாம் என்ற முடிவுடன் இருக்கும் போது திடீர் என்று ஒருநாள்,யாரோ ஒருவன் யாமினியை கடத்திச்சென்று கொடுரமாக கொலை செய்து விட்டு அந்த தகவலையும் ஆதிக்கு சொல்கிறான். பதறியபடி ஓடி சென்று பார்க்க கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடக்கும் யாமினியின் உடலை கண்டு பித்து பிடித்தவர் போல கதறி அழுகிறான் ஆதி. யாமினியைய் கொலை செய்தவன் யாரென்று தெரியாமல் கண்டுபிடிக்க முடியாமல் மரண வேதனை அடைகிறான். யாமினியின் நினைவால் குடி பழக்கத்திற்கு அடிமையாகி சுயநினைவு இழந்து தற்கொலை செய்துக்கொள்ள முயற்சிக்கும் நேரத்தில் அவனது நண்பன் டாக்டர்.சத்யா அவனை காப்பாற்றுகிறார். மன உளைச்சலில் இருக்கும் ஆதிக்கு யாமினியின் காதலி ஞாபகம் வந்ததா? இல்லையா ? யாமினியை கொலை செய்தவன் யார்..? அந்த கொலையாளி யாமினியின் எதிரியா.? அல்லது ஆதியின் எதிரியா ? என சஸ்பென்ஸ் திரில்லருடன் சொல்லப்படுகிறது என்கிறார் இயக்குனர் சூரியன்.G.

ராம் எண்டர்டைனர்ஸ் சார்பில் பிரகாஷ் S.V தமிழ். மலையாளம் என இரு மொழிகளில் தயாரித்துள்ள இப்படத்தை சூரியன்.ஜி
இயக்கியுள்ளார்.

ராஜீவ் கோவிந்த்
கதாநாயகனாக நடிக்க யுக்தா பெர்வி,சித்தாரா விஜயன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

வில்லன்களாக ஹரிஷ் பெர்டி, அபிஷேக் ஜோசப் ராஜ் ஆகியோர் நடிக்க அஷ்ரப் குழுக்கள், சோபா பிரியா, குழந்தை நட்சத்திரங்களான பெஹ்மின், பர்ஹான், ஜான்வி,சினேகல், ஆதித்யன் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு –
ஆதித்ய கோவிந்தராஜ்

இசை- ஸ்ரீநாத் விஜய்

பாடல்கள்- மோகன்ராஜன்

படத்தொகுப்பு-
ஸ்ரீநாத் பி.பாபு
சண்டை பயிற்சி-
அஷ்ரப் –
கே.டி வெங்கடேஷ்
நடனம்- சினேகா அசோக்

இணை தயாரிப்பு- சார்வாக் V.N, ஹர்ஷா.N

தயாரிப்பு -பிரகாஷ் S.V

கதை- சிவம்

திரைக்கதை வசனம் இயக்கம்- சூரியன்.G

இப்படத்தில் இரண்டு சண்டைக் காட்சிகளும் இரண்டு பாடல்களும் இடம் பெற்றுள்ளன.

யாரோ யாரிவனோ காதல் பூக்கும் கானகனோ… என்ற மனதை வருடும் பாடலும்

மிளிரும் பின்னாலி சுழலும் விழிகாரி…எனும் துள்ளலிசை பாடலும் இடம்பெற்றுள்ளது.

இதன் படப்பிடிப்பு குடகு மலை , கே ஜி எஃப், ஓசூர், வயநாடு போன்ற இடங்களில் 45 நாட்களில் இரு கட்ட படப்பிடிப்பாக நடைபெற்று முடிவடைந்தது. நிறைவு கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *