பல்லாலதேவா ராணா டக்குபதி, பிரசாந்த் வர்மா, தேஜா சஜ்ஜா, பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் உடைய ஹனு-மான் படத்திலிருந்து ‘மேன் ஆஃப் டூம்’ மைக்கேல் பாத்திரமாக வரும், வினய் ராய் கதாப்பாத்திரத்தின் லுக்கை வெளியிட்டார்.

தென்னிந்திய திரைத்துறையின் திறமையான இளம் ஹீரோ தேஜா சஜ்ஜா மற்றும் கிரியேட்டிவ் இயக்குனர் பிரசாந்த் வர்மாவின் முதல் பான்-இந்திய சூப்பர் ஹீரோ படமான ஹனு-மான் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் முன்னணி நட்சத்திரம் பல்லாலதேவா ராணா டக்குபதி இத்திரைப்படத்தில் இருந்து மைக்கேல் பாத்திரத்தின் லுக்கை வெளியிட்டுள்ளார்.

தனித்தன்மையுடன் தயாரிக்கப்பட்ட நீண்ட உடையில், மைக்கேல் ஆன வினய் ராய், கனரக இயந்திரத் துப்பாக்கிகளை ஏந்திச் செல்லும் தனது சொந்த ராணுவ வீரர்களுடன், இயந்திர வெளவால்களின் கண்காணிப்பில், ஒரு கோவிலின் முன் மூர்க்கமாக நடந்து செல்வதை இந்த புரமோவில் ரசிகர்கள் காணலாம். வினய் ராய் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கேஸ் மாஸ்க் மற்றும் கொள்ளையனுக்குண்டான ஐ பேட்ச் அணிந்துள்ளார், இது ஒட்டுமொத்த தோற்றத்திற்கும் மேலும் மிருகத்தனத்தை சேர்க்கிறது. வினய் ராய் எனும் மைக்கேல் தனது முதல் தோற்றத்திலேயே ரசிகர்களை பயமுறுத்துகிறார்.

பேட்மேனுக்கு ஜோக்கர், சூப்பர்மேனுக்கு லெக்ஸ் லூதர் போல், ஹனு-மானுக்கு சூப்பர்வில்லன் இந்த மைக்கேல். ஆனால் மைக்கேல் பொதுவாக வரும் மோசமான சூப்பர் வில்லன் அல்ல. இப்படத்தில் அவர் ஒரு சிறந்த கேரக்டர் ஆர்க்கைக் கொண்டிருப்பார் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் உள்ளது போல் தொழில்நுட்பத்தை சிறந்த முறையில் அணுகுபவராக இருப்பார். இந்த வில்லன் எங்கிருந்து வருகிறான்? ஏன் அஞ்சனாத்ரி லோகத்திற்கு வருகிறான்? இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய இன்னும் சிறிது காலம் நீங்கள் காத்திருக்க வேண்டும்.

பிரபல தயாரிப்பு நிறுவனமான பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் இப்படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்தில் அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடிக்கிறார்.
பிரபல நட்சத்திரங்கள் மற்றும் உயர்தர தொழில்நுட்ப வல்லுநர்கள் இப்படத்தில் பணியாற்றுகின்றனர். இப்படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

K நிரஞ்சன் ரெட்டி இப்படத்தை தயாரிக்கிறார், ஸ்ரீமதி சைதன்யா வழங்குகிறார். அஸ்ரின் ரெட்டி நிர்வாக தயாரிப்பாளராகவும், வெங்கட் குமார் ஜெட்டி லைன் புரடியூசராகவும், குஷால் ரெட்டி இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். தாசரதி சிவேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

நான்கு இளம் மற்றும் திறமையான இசையமைப்பாளர்கள்- அனுதீப் தேவ், ஹரி கவுரா, ஜெய் கிரிஷ் மற்றும் கிருஷ்ணா சவுரப் ஆகியோர் படத்திற்கு இசைக் கோர்வைகளை வழங்குகிறார்கள்.

நடிகர்கள்: தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர், வரலட்சுமி சரத்குமார், வினய் ராய் மற்றும் பலர்.

தொழில்நுட்பக் குழு:

எழுத்தாளர் மற்றும் இயக்குனர்: பிரசாந்த் வர்மா
தயாரிப்பாளர்: K நிரஞ்சன் ரெட்டி
பேனர்: பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட்
வழங்குபவர்: ஸ்ரீமதி சைதன்யா
திரைக்கதை: ஸ்கிரிப்ட்ஸ்வில்லே Scriptsville
ஒளிப்பதிவு: தாசரதி சிவேந்திரா
இசையமைப்பாளர்கள்: அனுதீப் தேவ், ஹரி
கவுரா, ஜெய் கிரிஷ் மற்றும் கிருஷ்ணா சௌரப் எடிட்டர்: எஸ்.பி.ராஜு தலாரி
நிர்வாக தயாரிப்பாளர்: அஸ்ரின் ரெட்டி வரி
தயாரிப்பாளர்: வெங்கட் குமார் ஜெட்டி
லைன் புரடியூசர்: குஷால் ரெட்டி
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ஸ்ரீநாகேந்திர தங்காலா
மக்கள் தொடர்பு : வம்சி-சேகர், சதீஷ்குமார் AIM
ஆடை வடிவமைப்பாளர்: லங்கா சந்தோஷி

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here