காரி தமிழ் திரைப்பட விமர்சனம்

காரி கதை
ராமநாதபுரம் அருகில், ஒரு கிராமத்தில் உள்ள கோவிலை, இரண்டு ஊர் மக்கள் சொந்தம் கொண்டாட நினைக்கிறார்கள் , இதனால் அந்த கோவில் யாருக்கும் சொந்தமில்லாமல் 30 வருடங்களாக பூட்டியே இருக்கிறது. கோவில் பூசாரி இரண்டு ஊர் மக்களிடமும் , ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்து போகச்சொல்கிறார். பிறகு இரண்டு ஊருக்கும் இடையில், ஒரு போட்டி நடத்த முடிவு செய்கிறார்கள். அந்த போட்டி என்னவென்றால், ஜல்லிக்கட்டில் ஒரு ஊர் மக்கள் 18 வகையான காளைகளை களத்தில் விடவேண்டும், மற்றொரு ஊர் மக்கள்,அந்த காளைகளை 18 வீரர்கள் அடக்க வேண்டும். இதுதான் அந்த போட்டி . இது ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம், இந்த ஊரில் தேவையில்லாத குப்பைகளை கொட்ட அரசாங்கம் திட்டம் போடுகிறது, இதனையும் இந்த ஊர் மக்கள் தடுத்தாகவேண்டும். சிறுவயதிலேயே நகரத்திற்கு வந்த கதையின் நாயகன் சசி குமார், கிராமத்தில் நடக்கும் இந்த பிரச்சனைக்குள் எப்படி வருகிறார் , என்பதும் அந்த போட்டியில் வென்று கோவிலை யார் சொந்தமாக்கினார்கள், என்பதுதான் படத்தின் மீதி கதை….

இதனை அறிமுக இயக்குனர் ஹேம்நாத் இயக்கியுள்ளார்

Read Also: Pattathu Arasan Movie Review

படத்தில் சிறப்பானவை
அனைவரின் நடிப்பு
பார்வதி அருணின் எதார்த்த நடிப்பு
ஒளிப்பதிவு
இமானின் இசை

படத்தில் கடுப்பானவை
கால காலமாக கண்ட அதே கதைக்களம்
சுவரசியமற்ற திரைக்கதை

Rating: ( 2.75/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *