Kamal Haasan Birthday Special

தமிழ் சினிமாவையும் தாண்டி உலக சினிமாவிற்கும் அறியப்பட்ட நடிகர்தான் உலக நாயகன் கமல்ஹாசன். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிறகு நடிப்பின் பல்கலைக்கழகம் என்றால் அது உலக நாயகன் கமல்ஹாசனாகத்தான் இருக்க முடியும். சொல்ல போனால் ரஜினிக்கு இணையாக பாக்ஸ் ஆஃபீஸ்ல் போட்டியில் இருந்தவர்.

இவர் தன்னுடைய சினிமா வாழ்க்கையே களத்தூர் கண்ணம்மாவில் ஆரம்பித்து விஸ்வரூபம் 2 படம் என்று பல எண்ணிக்கையிலான படங்களில் நடித்து சாதனை படைத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் சினிமாவில் அனைத்து வேலைகளிலும் ஆர்வம் கொண்ட ஒரு மாபெரும் நடிகரும் இவர்தான். இதுபோக அடுத்ததா டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்திலும் நடிக்க ஒப்பந்தமாய்க்கிருக்கிறார்.

தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சின் மூலம் டிவி தொகுப்பாளராக நிலைநிறுத்தியதோடு மட்டுமில்லாமல் தன்னுடைய அரசியல் பயணத்தையும் எடுத்து கூறி களத்திலும் இறங்கியுள்ளார், உலகமெங்கும் உள்ள ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.

உலகநாயகனுக்கு பிறந்தநாளான இன்று பிக்பாஸ் நிகழ்ச்சின் வெற்றியாளர் நடிகை ரித்விகா முதல் ஆளாக தனது பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here