டைம் டிராவல்… அம்மா சென்டிமெண்ட்… கதையம்சம் கொண்டதுதான் இந்த கணம்

வாழ்க்கையில் ஒவ்வொரு ‘கணமும்’ நமக்கு முக்கியம் என்பதைக் கூறும் படம். டைம் டிராவல் மற்றும் அம்மா சென்டிமெண்ட் இருக்கிறது.
பசங்களுக்கான விஷயங்கள் நிறைய இருக்கிறது. அறிவியல் புனைகதை (Science Fiction) படம் மட்டுமல்ல, அனைத்து விஷயங்களும் இருக்கும். குழந்தைகள் முதல் அனைவருக்குமான படமாக இருக்கும். இப்படத்தின் கதையை கேட்கும்போதே இப்படத்திற்கு செலவுகளும், வேலைகளும் அதிகமாக ஆகும் என்று தோன்றியது. ஆகையால், அதற்கு தகுந்த குழு வேண்டும் என்று நினைத்தோம். மாயா படத்தில் ஆரம்பித்து ஒவ்வொரு கதையையும் ஷரவானந்துக்கு அனுப்பிக் கொண்டே இருப்பேன். கடைசியில் இக்கதையில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

இப்படத்தின் தெலுங்கு மொழி பெயர் ‘ஒக்கே ஒக்கா ஜீவிதம்’ (ஒரே ஒரு வாழ்க்கை). மூன்று கதாநாயகர்களுக்குமே மூன்று விதமாக உணர்வுகள் இருக்கின்றது.

நமது ஒவ்வொருவரின் வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வோம்? அப்படி கிடைத்தால் இதையெல்லாம் சரி செய்து இருக்கலாம், இவை நடக்கமால் இருந்திருக்கலாம் என்று சில விஷயங்களில் தோன்றும். அப்படிப்பட்ட விஷயங்களை சரி செய்ய வாய்ப்பு கிடைத்தால் என்ன முயற்சி எடுப்போம்? அப்படி முயற்சி எடுக்கும்போது என்ன மாதிரி விஷயங்கள் எல்லாம் நடக்கும்? என்பதைத் தான் இந்த படத்தில் கூறியிருக்கிறோம்.

மேலும், அடுத்தடுத்த காட்சிகளில் இது தான் நடக்கும் என்று கணிக்க முடிந்தாலும் அது சுவாரஸ்யமாகவே இருக்கும்படியாக தொழில்நுட்பம், வசனங்கள் மற்றும் இசையும் இருக்கும்.

ஒரு கதாபாத்திரம், ஒரு காட்சியில் தோன்றினாலும் கச்சிதமாக பொருந்தும் படி எடுத்துள்ளோம். அதேபோல், ஒரு படம் எடுக்கும்போது நிதானமும் பொறுமையும் அவசியம் தேவை, அது ஸ்ரீகார்த்தியிடம் நிறையவே இருக்கிறது.

முதல் முறையாக இருமொழிப் படம் எடுக்கிறோம், பெரிய ஒரு செலவில் எடுக்கிறோம், அந்த படம் வருவதற்குள் அனைவரிடமும் மிகுந்த எதிர்பார்ப்பும், ஆவலும் இருக்க வேண்டும் மற்றும் அனைவரையும் திருப்திபடுத்தும் படமாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தோம். நாங்கள் நினைத்தது போல் படம் நன்றாக வந்திருக்கிறது. அனைவருக்கும் சம்பந்தப்படுத்தும் விதமாக இருக்கும்.

அறிவியல் புனைகதையை தனியாக எடுத்து வைத்துவிட்டு பார்த்தாலும் இந்த படம் நன்றாக இருக்கும். அம்மா மகன் செண்டிமென்ட்டை தனியாக எடுத்து பார்த்தாலும் நன்றாக இருக்கும். இப்படம் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் என்பதால், பின்புலம் இருக்கக் கூடிய நடிகர்கள் தேவை. இந்த கதையைப் புரிந்து கொண்டு உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக நடிக்க வேண்டும். அந்த நேரத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு படங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.

ரீது வர்மா நாயகியாக நடிக்கிறார். நாசர் விஞ்ஞானியாக நடித்திருக்கிறார்.
சதீஷ் கதாபாத்திரத்தை பார்ப்பவர்கள் எப்படி இதுபோன்ற சவாலான பாத்திரத்தில் நடித்திருக்கிறீர்கள்? என்று நிச்சயம் கேட்பார்கள்.

மூன்று நண்பர்கள், அவர்களைச் சுற்றி இருப்பவர்கள் பற்றிய கதை என்பதால், இந்த கதாபாத்திரம் தேவையில்லை, இந்த காட்சி தேவையில்லை என்று தோன்றாது. அனைத்து பாத்திரங்களுமே முக்கியமாகத்தான் தோன்றும். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் இருக்கும் என்றார்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here