மார்கழி திங்கள் தமிழ் திரைப்பட விமர்சனம்

மார்கழி திங்கள் கதை

பொள்ளாச்சி 2004: கதையின் நாயகி கவிதா. தன் தாத்தா ராமைய்யாவுடன் வாழ்ந்துவருகிறார். சிறுவயதிலேயே கவிதா பெற்றோரை இழந்ததால் தாத்தா ராமைய்யா கவிதாவை செல்லமாக வளர்க்கிறார். பள்ளியில் எப்போதும் முதல் மதிப்பெண் எடுக்கும் கவிதா, திடீரென்று இரண்டாம் மதிப்பெண் எடுக்கிறார், பிறகு மதிப்பெண் குறைந்ததை பற்றி தாத்தா ராமைய்யா கவிதாவிடம் கேட்கிறார்.

வினோத் என்ற மாணவன் புதிதாக பள்ளிக்கு சேர்ந்துள்ளான். அவன் முதல் மதிப்பெண் எடுப்பதால், கவிதா இரண்டாம் மதிப்பெண்ணுக்கு தள்ளப்படுகிறார். இதனால் போட்டியாக ஆரம்பித்த உறவு, காலப்போக்கில் காதலாக மாறுகிறது. பள்ளிப்படிப்பு முடியும் சமயத்தில் கவிதா, தாத்தாவிடம் தன் காதலை பற்றி சொல்கிறார். தாத்தாவும் சேர்த்துவைப்பதாக சத்தியம் செய்கிறார். கடைசியில் இவர்கள் இருவரும் இணைந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் சுசீந்திரன் எழுத, நடிகரும் அறிமுக இயக்குனருமான மனோஜ் பாரதிராஜா இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡இசைஞானியின் பாடல் & பின்னணி இசை
➡அறிமுக நடிகர்கள் ஷாம் செல்வன் & ரக்ஷனா நடிப்பு
➡பாரதிராஜாவின் எதார்த்த நடிப்பு & மற்ற அனைவரின் நடிப்பு
➡படத்தின் க்ளைமாக்ஸ்
➡ஒளிப்பதிவு

படத்தில் கடுப்பானவை

➡படத்திற்கு வலுசேர்க்காத முதல்பாதி
➡மேலும் மெழுகேற்றப்படாத திரைக்கதை

Rating: ( 2.75/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *