“ தர்மபிரபு ” திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது !

நடிகர் யோகிபாபு “ தர்மபிரபு “ திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அமைக்கப்பட்ட 2 கோடி செலவிலான செட்டில் படமாக்கப்படவுள்ளது. வெற்றி வெற்றி அமோக வெற்றி. நம்ம பிளஸ் ஒன்- அமோக வெற்றி என்ற வசனத்தை முதல் ஷாட்டில் யோகிபாபு பேச படப்பிடிப்பு துவங்கியது. இப்படத்தின் கதை எம லோகத்தை மையமாக கொண்டது. யோகிபாபு இப்படத்தில் யமனின் மகனாக நடிக்கிறார். நடிகர் ராதாரவி அவருடைய தந்தையாக எமன் வேடத்தில் நடிக்கிறார். விரைவில் வெளியாகவுள்ள கன்னிராசி…

Read More

அதிர்ச்சி தகவல் – ‘சர்கார்’ படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும்

‘சர்கார்’ படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். விஜய் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீஸான படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, ராதாரவி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வசூல் ரீதியாக, இதுவரை எந்த தமிழ்ப் படமும் செய்யாத சாதனையை ‘சர்கார்’ செய்துள்ளது. இரண்டு நாளில் 100 கோடி ரூபாய் வசூலித்து, பாக்ஸ் ஆபீஸில் ஹிட் அடித்துள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி,…

Read More

விஷாலுடன் திருமணம் இல்லை, அரசியலுக்கு வருவேன் – நடிகை வரலட்சுமி

நடிகர் விஷால் எனக்கு நெருக்கமான நண்பர். எல்லா வி‌ஷயங்களையும் இருவரும் பகிர்ந்து கொள்வோம். ஆனால் அவரும் நானும் காதலிப்பதாகவோ, டேட்டிங் செல்வதாகவோ வரும் தகவல்களில் உண்மை இல்லை. விஷாலுக்கு திருமணத்திற்கு பெண் பார்த்தால் நானே பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க தயார். அவர் திருமணம் செய்தால் மகிழ்ச்சியடையப் போவதும் நான்தான். எதற்காக விஷாலுடன் என்னை இணைத்து பேசுகிறார்கள் என்பதுதான் புரியவில்லை. “போடா போடி” படம் மூலம் அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். சமீபத்தில் வெளியான சண்டக்கோழி-2 படத்தில்…

Read More

விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம், அமெரிக்காவில் பிரமாண்டம்!

விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம், அமெரிக்காவில் பிரமாண்டம்! விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘சர்கார்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. க்ரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. இந்த படத்தை வெளிநாடுகளிலும் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். குறிப்பாக, அமெரிக்காவில் மட்டும் 150க்கும் மேற்பட்ட இடங்களில் பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய இருக்கின்றனர். கோலிவுட் மூவிஸ் மற்றும் நர்மதா டிராவல்ஸ் இணைந்து அமெரிக்க வெளியீட்டு…

Read More

நடிகைகள் கூறும் பாலியல் புகாரை விசாரிக்க 3 பேர் குழு: நடிகர் சங்க செயலாளர் விஷால் அறிவிப்பு

சென்னையில் ‘சண்டக்கோழி 2’ படம் குறித்த செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், சினிமா துறையில் பெண்கள் கூறும் பாலியல் புகார்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க 3 பேர் குழு அமைக்கப்படும் என்று நடிகர் சங்க செயலாளர் விஷால் கூறினார். இதில், ‘மீ டூ’ இயக்கம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள் விக்கு பதில் அளித்து விஷால் கூறியதாவது: பல துறைகளைச் சேர்ந்த பெண் களும் கடந்தகாலத்தில் பாலியல் ரீதியாக தாங்கள் சந்தித்த பிரச்சி னைகளை…

Read More