டாப்ஸி நடிக்கும் ‘கேம் ஓவர்’: தமிழ், தெலுங்கில் தயாராகிறது

டாப்ஸி நடிக்கும் ‘கேம் ஓவர்’ என்ற படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகிறது. ‘இறுதிச்சுற்று’, ‘விக்ரம் வேதா’, ‘தமிழ்ப்படம் 2’ உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்த ஒய் நாட் ஸ்டுடியோஸ் (YNOT Studios) நிறுவனம் ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்கள். எஸ்.ஜே.சூர்யா, ஷிவதா நாயர் நடிப்பில் ‘இறவாக்காலம்’ என்ற படத்தை இயக்கியுள்ள அஸ்வின் சரவணன், இந்தப் படத்தை இயக்குகிறார். இந்நிலையில் இப்படத்தின் First Look நேற்று வெளியிடப்பட்டது.

Read More

சண்டைப்பயிற்சி இயக்குனர்கள் அன்பறிவ் நீக்கம் சட்டத்திற்கு புறம்பானது ; இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம்

இன்றைய சினிமா துறையில், கபாலி. 24, காஷ்மோரா, மெட்ராஸ், சண்டக்கோழி-2 என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூர்யா, விஷால், கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்களுக்கு மட்டுமன்றி மேலும் பல திரைப்படங்களுக்கு சண்டை பயிற்சியாளர்களாக (ஸ்டண்ட் மாஸ்டர்களாக) சிறப்பாக பணியாற்றிக் கொண்டு இருப்பவர்கள் அன்புமணி-அறிவுமணி என்னும் இரட்டை பிறவியர்களான, சினிமா துறையினரால் அன்பறிவ் என அழைக்கப்படும் சுறுசுறுப்பான ஸ்டண்ட் மாஸ்டர்கள். பொதுவாக தங்களிடம் பணியாற்றும் சண்டை பயிற்சியாளர்களுக்கு தனி கவனம் செலுத்தி அவர்களுக்கு சிறந்த…

Read More

சர்வதேச அளவில் சிறந்த நடிகர் விருது: விஜய் ‘மெர்சல்’ சாதனை

தளபதி ரசிகர்கள் சந்தோஷத்தோட உச்சத்தில் இருக்காங்கன்னு தான் சொல்லனும். ஏன்னா? லண்டனை சேர்ந்த IARA ங்கிற அமைப்பு ஆண்டுதோறும் சர்வதேச அளவில் சிறந்த நடிகர்களை தேர்வு செய்து வருகிறது. மொத்தம் 24 பிரிவுகளில் இந்த விருதை வழங்கி வருகிறது. அதே போல் 2018 ம் ஆண்டுக்கான விருது போட்டி நடைபெற்றது. அதில் “மெர்சல்” படத்தில் நடித்த தளபதி விஜய்க்கு “சிறந்த நடிகர்” மற்றும் “சிறந்த சர்வதேச நடிகர்” என்று இரு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. விஜயுடன் சேர்ந்து பிரபல…

Read More