ராஷ்மிக்கா பாத்த முதல் படம் கில்லி!!

Reaction குயின் என்று செல்லமாக ரசிகர்கள் மத்தியில் அழைக்கப்படும்  கன்னட நடிகை ராஷ்மிகா மந்தனா, சூப்பர்ஹிட் கன்னட திரைப்படமான ‘கிரிக் பார்ட்டி’யுடன் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் தமிழில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘சுல்தான்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகவுள்ளார். 144 தடை உத்தரவால் வீட்டில் இருக்கும் கதாநாயகிகள் ரசிகர்கள் உடன் நேரலையில் பேசுவது உண்டு. அப்படி  சமீபத்தில் ரசிகர்களுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் உரையாடலில் ஈடுபட்டார் ராஸ்மிகா. அவர்களில் ஒருவர் ராஷ்மிகாவிடம்…

Read More

மிஸ்கின் அருண் விஜய் இணையும் புதிய கூட்டணி

சைக்கோ’ பட வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் மிஷ்கின் துப்பறிவாளன் 2 படத்தினை இயக்கிவந்தார். அப்படத்தின் கதாநாயகனும் தயாரிப்பாளருமான விஷாலுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இப்படத்திலிருந்து வெளியேறினார். அதையடுத்து, சிம்புவிடம் ஒரு கதையைக் கூறியதாகவும், அந்த கதைக்களத்தில் ஈர்க்கப்பட்டு, மிஷ்கினுடன் இப்படத்தில் பணியாற்ற விருப்பப்படுவதாகவும் தகவல்கள் சமீபத்தில் வெளினாகின. சிம்பு, வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ திரைப்பட படப்பிடிப்பை முடித்த கையோடு மிஷ்கின் படத்தில் நடிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டுவந்தது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளிவராத இந்நிலையில்,…

Read More

முடியும் என்பதே மூலதனம் – தனுஷின் கதை

“பாக்க தான் ஒல்லி ஆனா அண்ணே கில்லி” – தனுஷ் தமிழ் சினிமாவின் பெருமை!! நடிகர் தனுஷ் தனது தனித்துவமான நடிப்பை தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டிலும் நிரூபித்துள்ளார். தனது அப்பா கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படத்தின் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானார். 2002-ஆம் ஆண்டு மே 10-ஆம் தேதி வெளியான இப்படம் இன்றோடு 18 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அதன் அர்த்தம், நடிகர் தனுஷ் சினிமாவில் அறிமுகமாகி 18 ஆண்டுகளை நிறைவு செய்து, 19-ஆம்…

Read More

சந்தானத்தின் அடுத்தப் படத்தின் படப்பிடிப்பு துவக்கம்

முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் சந்தானம், தற்போது சில படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘டிக்கிலோனா’ படத்தில், சந்தானம் 3⃣ வேடங்களில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கவுள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது.

Read More

‘கைதி’ படத்தின் வசூல் குறித்த விவரம்

கார்த்தி நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் ‘கைதி’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் கைதி படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு, தமிழகத்தில் இப்படம் ரூ.15 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கேரளா, அமெரிக்கா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் தற்போதே இப்படம் லாபத்தை எட்டியுள்ள நிலையில், கைதி படத்தை கன்னடம், ஹிந்தி என சில மொழிகளில் ரீமேக் செய்யவும் போட்டி நடந்து வருகின்றது குறிப்பிடத்தக்கது. Subscribe to…

Read More

‘பொன்னியின் செல்வன்’ டிசம்பரில் ஆரம்பம்

செக்க செக்க சிவந்த வானம் படத்திற்கு பிறகு இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் அடுத்ததாக நாம் அனைவரும் ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கின்ற படம்தான் பொன்னியின் செல்வன். இந்த படத்திற்கான அதிகார பூர்வ தகவல் இன்னும் கிடைக்கவில்லை என்றாலும் படத்துக்கான செய்திகள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கிடைத்து கொண்டிருக்கிறார். முக்கியமாக எம் ஜி ஆர், கமல் ஹாசன் என்று பலர் எடுக்க நினைத்த கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை இயக்குனர் மணிரத்தினம் இயக்க போகிறார் என்றதும் எல்லோரும் ஈடுபாடுடன் இந்த படத்தின்…

Read More

மீண்டும் சிக்கலில் தனுஷ் படம்

கோலிவுட் சினிமாவில் கதைக்கு ஏற்றாற்போல் தன்னை உருவாக்கப்படுத்திக்கொள்ளும் நடிகர்களில் தனுஷ் அவர்களும் இருக்கின்றார் என்றே சொல்லவேண்டும். அந்தளவுக்கு மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ள நடிகர் தனுஷ் நிறைய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது உங்களுக்கே தெரிந்த ஒன்றே. அந்தவகையில் வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன்,ஆடுகளம், வடசென்னைக்கு பிறகு வெளிவர இருக்கின்ற படம்தான் அசுரன். இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இதுமட்டுமில்லாமல் துரை செந்தில்குமார் இயக்கத்தில் பட்டாசு, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும், பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி…

Read More

மீண்டும் குண்டாக காட்சியளித்த நடிகை

தமிழ், தெலுங்கு மொழிகளில் ரசிகர்களின் உள்ளதை கவர்ந்து முன்னணி நடிகையாக இருப்பவர்தான் நடிகை அனுஷ்கா. இவர் தமிழில் மாதவனுக்கு ஜோடியாக இரண்டு படத்தின் மூலம் அறிமுகமானார். இதுமட்டுமில்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தல அஜித், தளபதி விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி, ஆர்யா, சிம்பு என்று பல பிரபல நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். முக்கியமாக அனுஷ்கா நடிப்பில் கடைசியாக நாம் பார்த்து வியந்த படங்கள் பாகுபலி, பாகுமதி. இந்த படத்திற்கு பிறகு ஒரு வருடமாக எந்த படத்திலும்…

Read More

Mr Local Movie Review

ராஜேஷ் படங்கள் என்றாலே குடும்பத்துடன் வந்து எந்த ஒரு எமோஷனல் காட்சிகளும் இல்லாமல் சிரித்து ரசிக்ககூடிய படமாக இருக்கும் அதே போல் தற்போது லோக்கலாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கும்  மிஸ்டர் லோக்கல் படம் எப்படி இருக்கு என்று பார்க்கலாம். கதைக்களம்சிவகார்த்திகேயன் ஒரு தனியார் கார் கம்பெனியில் வேலை பார்க்கிறார். இவருடைய அம்மா ராதிகா ஒரு சீரியல் நடிகையிடம் போட்டோ எடுக்க வேண்டும் என்று நினைக்கின்றார்.அதனால் அவரை அழைத்துக்கொண்டு அந்த நடிகையை பார்க்க போகும் போது, நயன்தாரா அவர்களை காரில்…

Read More

மணிரத்தினத்தின் உதவி இயக்குனர் தனாவுடன் இணையும் விக்ரம் பிரபு

அசுரகுரு, வால்டர் படத்தை தொடர்ந்து அடுத்தாக வானம் கொட்டட்டும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் தெரிவித்துள்ளார் நடிகர் விக்ரம் பிரபு. இந்த படத்தை இருவர், நேருக்கு நேர், தில்சே, அலைபாயுதே, ராவணா உள்ளிட்ட பல படங்களை தயாரித்த இயக்குனர் மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தனது 19ம் வது படமாக வானம் கொட்டட்டும் படத்தை தயாரிக்கயுள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருக்கும் மணிரத்தினத்தின் உதவி இயக்குனராக பணிபுரிந்த தனா இந்த படத்தை இயக்கிறார். இவர் ஏற்கனவே, பாடகர்…

Read More