“ரொம்ப சாதாரண ஹவுஸ் வொய்ஃப் ஆக #ரெஜினா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். ரெஜினாவை சுற்றி நடக்கும் சில எதிர்பாராத சம்பவங்கள் தான் இக்ககதை. அவள் அதை எப்படி எதிர்கொள்கிறாள் என்கிற நெஞ்சம் பதபதக்கிற காட்சி படத்தை பார்க்க தூண்டும். டைரக்டர் டாமின் டி. சில்வா என் கேரக்டரை சூப்பராக வடிவமைத்திருக்கிறார். கதையை அவர் சொல்லும் போதே, இந்த படத்தை பார்க்க எனக்கே ஆவலை தூண்டியது. டைரக்டருடைய முந்திய ஹிட் படங்களான “பைபிள் சுவத்திலே பிராணயம்”, “ஸ்டார்” போன்ற படங்களை விட “ரெஜினா” படத்தின் திரைக்கதையை ஸ்டைலாக அமைத்துள்ளார். எனது படங்களில் “ரெஜினா” முக்கியமான படமாக இருக்கும். இவ்வாறு சுனைனா கூறினார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் ஸ்டைலிஷ் திரில்லர் படமாக ‘ரெஜினா’ உருவாகிறாள்.

“ரெஜினா” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட வெங்கட் பிரபு.

( Yellow Bear Production LLP ) எல்லோ பியர் புரொடக்‌ஷன் சதீஷ் நாயர் இப்படத்தினை தயாரிக்கிறார்.

இப்படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார், மலையாள பிரபலம் டோமின் டி சில்வா.

ரெஜினா படத்தின் பாடல்களை இசையமைத்து படத்தை தயாரிக்கிறார் சதிஷ் நாயர்.
இந்த பாடல் 4 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

பாடல்களுக்கான வரிகளை யுகபாரதி, விவேக் வேல்முருகன், விஜயன் வின்சென்ட் மற்றும் இஜாஸ்.R எழுதியுள்ளனர்.

பவி K.பவன் ஒளிப்பதிவு செய்ய, கமருதீன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். டோபி ஜான் எடிட்டிங் செய்ய, ஆடை வடிவமைப்பை ஏகன் செய்கிறார். PRO ஜான்சன்.

படத்தின் படல்கள் வெளீயீடு மற்றும் வெளியீட்டுன் தேதி பின்னர் அறிவிக்கப் படும்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைபிரபலங்களுக்காக திரையிடப்பட்ட ‘சுழல் தி வோர்டெக்ஸ் ‘
அடுத்த கட்டுரை“ஜென்டில்ன்மேன்2” ஒளிப்பதிவாளராக அஜயன் வின்சென்ட் அறிவிப்பு !!!

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here