“ஜென்டில்ன்மேன்2” ஒளிப்பதிவாளராக அஜயன் வின்சென்ட் அறிவிப்பு !!!

ஏற்கனவே இதன் இசை அமைப்பாளராக பாகுபலி புகழ் மரகதமணி ( எம்.எம்.கீரவாணி ) , இரண்டு கதாநாயகிகளாக நயந்தாரா சக்கரவர்த்தி, ப்ரியா லால் அறிவிக்கப்பட்டனர்.

மக்களை வியப்பில் ஆழ்த்திய பிரமாண்ட படைப்பாக ”ஜெண்டில்மேன்’ படத்தின் மூலம் டைரக்டர் ஷங்கர், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரையும் உலகம் புகழ செய்தார்,கே.டி.குஞ்சுமோன். அதே போல் இப்போது,
‘ஜென்டில்மேன்2 ‘ டைரக்டராக ‘ஆஹா கல்யாணம்’ புகழ்
ஏ.கோகுல் கிருஷ்ணா பெயரை அறிவித்ததும் டிரண்டிங் ஆனது.
படத்தின் பின்னணியில் உள்ள தொழில்நுட்ப கலைஞர்களும் அனுபவமிக்க பிரபலங்களாக இருக்கும் என்றும் கூறியிருந்தார், தயாரிப்பாளர் *கே.டி.குஞ்சுமோன்.

இப்போது அஜயன் வின்சென்டை ஒளிப்பதிவாளராக அறிவித்துள்ளார் கே.டி.குஞ்சுமோன்.
‘ஜென்டில்மேன்‘ படத்தில் புது இயக்குனருக்கு உறுதுணையாக நேஷ்னல் அவார்ட் வின்னர் ஜீவாவை ஒளிப்பதிவாளராக நியமித்தது போல்,
இதன் இரண்டாம் பாகத்திலும் அனுபவம் வாய்ந்த அஜயன் வின்சென்டை ஒளிப்பதிவாளராக நியமித்துள்ளார்.

இவர், தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழி பிரம்மாண்ட படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றி பிரபலமானவர் அஜயன் வின்சன்ட். இவர் ஒளிப்பதிவு செய்த அன்னமய்யா, ருத்ரமாதேவி, டாம் 999 போன்ற படங்களின் ஒளிப்பதிவு நுட்பம் வெகு பாராட்டுக்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் இதே கம்பெனியில் ‘ரட்சகன்’ படத்துக்கும் இவர் தான் ஒளிப்பதிவாளர். அனுபவமிக்க அஜயன் வின்சன்ட் அதிநவீன தொழி்நுட்பங்களை கொண்டு தான் ‘ஜென்டில்மேன்2 ‘ வின் ஒளிப்பதிவு செய்ய உள்ளாராம்.

படத்தின் கதாநாயகன், மற்ற நடிகர் நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்புகளும் உடனேயே எதிர்பார்க்கலாம் என்றும் மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தெரிவித்தார்.

#ஜான்சன்

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here