அழகி பாதித்தது போல் இன்னும் எந்த கதையும் என்னை பாதிக்க வில்லை என்றார், தயாரிப்பாளர் உதயகுமார்

2002 பொங்கல் அன்று பல பெரிய படங்களோடு சுமார் 8படங்களுக்கு மத்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி கண்ட படம் தங்கர் பச்சானின் அழகி. மக்கள் மனதை வருடி கொள்ளை கொண்ட படம். 1986 ஆம் ஆண்டில் சண்முகம்-தனலட்சுமி ஆகிய இருவரின் கதை கல்வெட்டு எனும் பெயரில் சிறுகதையாக உருவானது. பதினைந்து ஆண்டுகளுக்குப்பின் “அழகி” எனும் பெயரில் திரைப்படமாக உயிர்பெற்று மக்களின் நெஞ்சங்களில் நிறைந்தது. ஒவ்வொருவரும் தனது தனலட்சுமியைத் தேடி அலைந்தது போல காலம் பிரித்து வைத்து சேர்ந்து…

Read More

கடலூர் மாவட்டம் பாலைவனமாவதை வேடிக்கை பார்க்கலாமா?

எனது தொடக்கப்பள்ளிக் காலத்தில் என் பாட்டி வீட்டின் சமையலறையில் நீருற்று பொங்கி வழிந்து அங்கே மீன் பிடித்து விளையாடினோம் என்பதை நம்புவீர்களா? ஆர்டீஷியன் ஊற்றுப்பகுதியாக வெறும் எட்டு அடிகளில் இருந்த நிலத்தடி நீர்மட்டம் இப்போது எண்ணூறு அடிகளைத் தாண்டிக் கொண்டிருக்கிறது. அத்தகைய நிலங்களில் ஆழ்துளை கிணறுகளை வெட்டி உற்பத்தி செய்த கரும்புகளைக்கொண்டுதான் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் கொண்டாடி மகிழ்கிறோம் என்பதையும் இவ்வேளையில் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன். தமிழ்நாட்டிலேயே அதிக மூச்சுக் கோளாறு நோயினால் பாதிப்புக்குள்ளாகுபவர்களும், உயிரிழப்பவர்களும் நெய்வேலியைச் சுற்றியுள்ள…

Read More

மீண்டும் தங்கர் பச்சானின் “கருமேகங்கள் கலைகின்றன” படபிடிப்பில் கலந்து கொண்ட பாரதிராஜா!

படபிடிப்பில் ஒரு சிறந்த திரைப்படத்தை உருவாக்குவதற்கே எப்பொழுதும் நான் முனைகின்றேன். இம்முறை சிறந்த தொழில்நுட்பம் மற்றும் நடிப்பு கலைஞர்களுடன் இணைந்து ‘கருமேகங்கள் கலைகின்றன’ எனும் திரைப்படத்தை சிதையாமல் உருவாக்கிட பாடுபடுகின்றேன். பாதிக்கு மேல் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் பாரதிராஜா அவர்களின் உடல்நலம் குன்றியதால் அனைத்து பணிகளும் கடந்த 130 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் இப்பொழுது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எண்ணற்ற இடையூறுகளைத் தாண்டி ஒவ்வொரு நாளும் முழுமூச்சுடன் உழைத்துக் கொண்டிருக்கிறோம்! உங்கள்…

Read More

கலைஞரை கலங்க வைத்த படம்; தம்பி தங்கர் பச்சானுக்கு நன்றி! – நடிகர் சத்யராஜ்

ஒன்பது ரூபாய் நோட்டு படம் 15 வருடங்களுக்கு முன்பு நவம்பர் 30 ஆம் தேதி வெளியானது. அந்த படத்தைப் பற்றியும், அப்படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தைப் பற்றியும் நடிகர் சத்யராஜ் கூறியதாவது : வணக்கம். நவம்பர் 30, ஒன்பது ரூபாய் நோட்டு என்கிற அற்புதமான காவியம் வந்து 15 வருடங்கள் ஆகிறது. அதில் மாதவ படையாட்சி என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை; வாழ்ந்திருக்கிறேன்! என்று சொல்லுவார்கள். அப்படி என்னை வாழ வைத்தது அன்பு தம்பி தங்கர் பச்சான். கதை, திரைக்கதை,…

Read More

15ம் ஆண்டில் தங்கர் பச்சானின் “ஒன்பது ரூபாய் நோட்டு” ! சத்யராஜை பெருமைப் படுத்திய படம்!!

எனது 25 ஆம் அகவையில் எழுதத் தொடங்கி 11 ஆண்டுகளுக்குப் பின் 1996 ஆம் ஆண்டில் புதினமாக வெளியாகி 2007 ஆம் ஆண்டில் “ஒன்பது ரூபாய் நோட்டு” திரைப்படமாக வடிவம் கொண்டது. எந்த ஒரு சிறந்த படைப்பும் அதற்குத் தேவையானவைகளைத் தானே தகவமைத்துக் கொள்ளும் என்பதைப் பலமுறை பட்டறிந்திருக்கிறேன். அவ்வாறே இத்திரைப்படத்தில் பங்களிப்பு செய்த நடிப்புக் கலைஞர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் முழுமையான ஈடுபாட்டுடன் பணியாற்றினர். சத்யராஜ், அர்ச்சனா, நாசர், ரோகினி, நடன இயக்குநர் சிவசங்கர் என அனைவரும்…

Read More