கடல் சார் திகில் சாகசப்படமான ‘கிங்ஸ்டன்’ எனும் திரைப்படத்தை ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்!

இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘கிங்ஸ்டன்’ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார். சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் தொடக்கவிழாவில், ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் கலந்துகொண்டு, ‘கிங்ஸ்டன்’ படத்தை கிளாப் அடித்து, அதன் படப்பிடிப்பையும் தொடங்கி வைத்தார். அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் ‘கிங்ஸ்டன்’. இப்படத்தில் ‘இசை அசுரன்’ ஜீ….

Read More

ஜி.வி.பிரகாஷ் குமார்-ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள “டியர்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது !!

இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார்-ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள “டியர்” படத்தின் படப்பிடிப்பு முழுதாக முடிவடைந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ‘இசை மன்னன்’ ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முதன் முறையாக இணைந்து நடிப்பதால், ‘டியர்’ திரைப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியானதிலிருந்தே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்து வருகிறது. Nutmeg Productions சார்பில் வருண் திரிபுரனேனி மற்றும் அபிஷேக் ராமிசெட்டி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள…

Read More

ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அடியே..’ படத்தின் மோசன் போஸ்டர் வெளியீடு

இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘அடியே ..’ எனும் திரைப்படத்தின் மோசன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ஜெயம் ரவி அவருடைய இணையதள பக்கத்தில் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார். ‘திட்டம் இரண்டு’ படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘அடியே‘. இதில் ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு…

Read More

உதய் மகேஷ் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார் நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு துவங்கியது

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம், சரத்குமார், கார்த்திக் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களை வைத்து பல வெற்றிப் படங்களை தயாரித்த கவிதாலயா மற்றும் முன்னணி ஓடிடி தளமான ஹாட் ஸ்டார் இணைந்து தயாரிக்க உதய் மகேஷ் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார், அனஸ்வரா ராஜன் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. புஷ்பா கந்தசாமி மற்றும் கந்தசாமி பரதன் தயாரிக்கும் இப்படத்தை நாளை, சக்கர வியூகம் உள்ளிட்ட படங்களை இயக்கியவரும், ஃபேமிலி மேன்…

Read More

ஜிவி பிரகாஷ்குமார் – கெளதம் வாசுதேவ் மேனன் நடித்திருக்கும் “13” டீசர் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது

தனித்துவமான கருத்துகளுடன் புதிய கதையம்சத்துடன் கூடிய படங்கள் நிச்சயம் உலக சினிமா பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும். அந்த வரிசையில், K விவேக் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார்- கெளதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ள “13” படத்தின் டீசர் நமக்குள் படம் குறித்தான ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு நிமிடம் 12 செகண்ட்ஸ் ஓடக்கூடிய இந்த டீசர் புதிரான காட்சி அமைப்புகள், இசை மற்றும் ஒலியுடன் அமைந்திருக்கிறது. ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் ஸ்டைலிஷான கெளதம் வாசுதேவ் மேனன்…

Read More