ஏப்ரல் 5 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில், “ஹனுமான்” திரைப்படம் !!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் அதிரடி பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘ஹனுமான்’ படத்தின் தமிழ், கன்னடம் மற்றும் மலையாள பதிப்புகளை ஏப்ரல் 5 முதல் ஸ்ட்ரீம் செய்கிறது. அதிரடி ஆக்சன், பொழுதுபோக்குடன் பக்தியும் கலந்த, இந்த சூப்பர் ஹீரோ என்டர்டெய்னர், பிரபல இயக்குநர் பிரசாந்த் வர்மா உடைய சினிமா யுனிவர்ஸின் முதல் படைப்பாகும். ‘ஹனுமான்’ படத்தில் தேஜா சஜ்ஜா மற்றும் அமிர்தா ஐயர் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில்…

Read More

சூப்பர் ஹீரோ திரைப்படமான ‘ஹனுமான்’ படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது!

‘ஹனுமான்’ திரைப்படத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னோட்டம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்சின் முதல் படம் இது. அகண்ட பாரதத்தின் இதிகாசத்திலிருந்து ஈர்க்கப்பட்டு இந்த முன்னோட்டத்தின் முதல் காட்சி- அஞ்சனாத்திரி இடம் பெற்றிருப்பது, நம்மை கற்பனை பிரபஞ்சத்திற்குள் அழைத்துச் செல்கிறது. தண்ணீருக்கடியில் நடக்கும் காட்சியில் கதாநாயகன் ஒரு நட்சத்திரம் போல் ஜொலிக்கும் முத்து ஓட்டின் அருகில் செல்வதை காட்சிப்படுத்துகிறது. ‘யதோ தர்ம ததோ ஹனுமா.. யதோ ஹனுமா ததோ ஜெய..’ (எங்கே நீதி இருக்கிறதோ. ….

Read More

தேஜா சஜ்ஜா நடித்திருக்கும் ‘ஹனு- மேன்’ படத்தின் ‘ஹனுமான் சாலிசா’ பாடல் வெளியீடு

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு தேஜா சஜ்ஜா நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஹனு-மேன்’ படத்தில் இடம்பெற்ற ஹனுமான் சாலிசா எனும் பாடல் வெளியாகி இருக்கிறது. இந்த பாடலுடன் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும், காணொளியும் வெளியாகி இருக்கிறது. படைப்புத்திறன் மிகு படைப்பாளி பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘ஹனு-மேன்’. இதில் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடித்திருக்கிறார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், ராஜ் தீபக்…

Read More