இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் யோகிபாபு நடிக்கிறார்!!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தனது அடுத்த படைப்பாக இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், நடிகர் யோகிபாபு நடிக்கும் புதிய திரைப்படத்தை, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் திரைப்படமாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தில், நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்கிறார், லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாக நடிக்கிறார். முன்னதாக இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் வெளியான  “ஒரு கிடாவின் கருணை மனு” மற்றும் “சத்திய சோதனை” படங்கள் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப்…

Read More

’சில நொடிகளில்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

வினய் பரத்வாஜ் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, ராஜ் வரதனாக முன்னணி கதாபாத்திரத்திலும், புன்னகை பூ கீதா மேதா வரதனாகவும், யாஷிகா ஆனந்த் மாயா பிள்ளை என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மிஸ்ட்ரி, சஸ்பென்ஸ், எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட இந்தப் படம் வரும் நவம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பாடகியும் இந்தப் படத்தின் இசையமைப்பாளருமான தர்ஷனா பேசியதாவது, “பல்லேலக்கா பாடல் மூலம் என்னுடைய சினிமா பயணம் ஆரம்பித்தது. அதன்…

Read More

சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி நடிக்கும் ‘வெப்பன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

மில்லியன் ஸ்டுடியோஸ் எம்.எஸ். மன்சூர் தயாரிப்பில், குகன் சென்னியப்பன் இயக்கத்தில் சத்யராஜ் நடிக்கும் ‘வெப்பன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. மறக்க முடியாத மற்றும் சிறந்த அனுபவத்தை பார்வையாளர்களுக்கு இந்தத் திரைப்படம் நிச்சயம் கொடுக்கும் எனப் படக்குழுவினர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர். இப்படத்தில் சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் ராஜீவ் மேனன், ராஜீவ் பிள்ளை, தன்யா ஹோப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்கள் தவிர, நடிகர்கள் யாஷிகா ஆனந்த், மைம்…

Read More

ஜெயம் ரவி- நயன்தாரா நடிப்பில் திரில்லரான ‘இறைவன்’ டிரெய்லர் வெளியானது

பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘இறைவன்’ படத்தில் நடிகர் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்துள்ளார். அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் பொருந்திப் போகும் ஜெயம் ரவி இந்தப் படத்திலும் சிறப்பாக நடித்துள்ளார் என்பதை டிரெய்லர் தெளிவாக காட்டுகிறது. 2 நிமிடம் 35 விநாடிகள் ஓடக்கூடிய இந்த டிரெய்லர் ஒரு மனநோயாளி கொலையாளியின் (ராகுல் போஸ் நடித்துள்ளார்) இருண்ட உலகத்தையும், கதாநாயகனின் (ஜெயம் ரவி) வருகையையும் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. நேர்மையும் கோபமும் கொண்ட…

Read More

சுரேஷ் ரவி, யோகி பாபு நடிக்கும் புதிய திரைப்படம் இனிதே துவங்கியது !!

BR Talkies Corporation தயாரிப்பில், நடிகர்கள் சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்க, கிராமத்து பின்னணியில் வித்தியாசமாக புதிய காமெடி டிராமா திரைப்படத்தின் படப்பிடிப்பு கோலாகலமாக துவங்கியுள்ளது. கடந்த வாரம் பூஜை நடைபெற்ற நிலையில், காரைக்குடியில் இப்படத்தின் படப்பிடிப்பு கோலாகலமாக துவங்கியது. முன்னதாக BR Talkies Corporation தயாரிப்பில், நடிகர் சுரேஷ் ரவி நடித்த “காவல்துறை உங்கள் நண்பன்” திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன் விமர்சக ரீதியாக தரமான திரைப்படமென பெரும் பாராட்டுக்களை பெற்றது. இந்நிலையில் தற்போது…

Read More

’வெப்பன்’ படம் சார்பாக #WearHelmetRally நிகழ்ச்சி நடத்தப்பட்டது!

நடிகர்கள் சத்யராஜ், வசந்த் ரவி, தான்யா ஹோப் நடித்துள்ள சஸ்பென்ஸ்- ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘வெப்பன்’. புதிய டெக்னாலஜியில் வெளியீட்டிற்குத் தயாராகி வரும் இந்தப் படத்தை மில்லியன் ஸ்டுடியோ மன்சூர் தயாரித்திருக்க, குகன் சென்னியப்பன் இயக்கியுள்ளார். தயாரிப்பு நிறுவனம் சார்பாக இன்று (27.08.2023) காலை 6 மணிக்கு #WearHelmetRally நிகழ்வு நடத்தப்பட்டது. இதனை நடிகர்கள் வசந்த்ரவி, தான்யா ஹோப் மற்றும் தயாரிப்பாளர் மன்சூர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். சாலையில் வாகனம் ஓட்டும் போது பாதுகாப்பாக ஓட்டுவதும்,…

Read More

சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி தான் ; அங்காரகன் விழாவில் சத்யராஜ் அதிரடி பேச்சு !!

சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி தான் ; அங்காரகன் விழாவில் சத்யராஜ் அதிரடி பேச்சு வாரிசு விழாவில் ஆரம்பித்து வைத்த சரத்குமார் ; அங்காரகன் விழாவில் முடித்து வைத்த சத்யராஜ் சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு அங்காரகன் விழாவில் முற்றுப்புள்ளி வைத்த சத்யராஜ் வில்லன் இல்லையென்றாலும் வில்லங்கம் இருக்க வேண்டும் ; அங்கராகன் விழாவில் சத்யராஜ் ஓபன் டாக் ஒண்ணரை மொழி மட்டுமே எனக்கு தெரியும் ; அங்காரகன் விழாவை கலகலக்க வைத்த சத்யராஜ் ஜூலியன் & ஜெரோமா…

Read More

‘லைசென்ஸ்’ பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா

JRG புரடக்சன்ஸ் சார்பில் N.ஜீவானந்தம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘லைசென்ஸ்’. கணபதி பாலமுருகன் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி செந்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு நடிகையாக அறிமுகம் ஆகிறார். மேலும் இந்த படத்தில் ராதாரவி, N.ஜீவானந்தம், விஜய் பாரத், பழ.கருப்பையா கீதா கைலாசம், அபி நட்சத்திரா, தன்யா அனன்யா, வையாபுரி, நமோ நாராயணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு காசி விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்ய…

Read More

ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா 2021ல் மூன்று விருதுகளை வென்ற மாஸ்டர் திரைப்படம்

சமீபத்தில் ஜப்பானில் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட திருவிழா 2021 நடைபெற்றது. இந்த சர்வதேச திரைப்பட திருவிழா அந்த வருடத்தின் சிறந்த படங்களை வகைப்படுத்தி தேர்வு செய்தது. மாஸ்டர் படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த நடிகருக்கான விருது தளபதி விஜய்க்கு வழங்கப்பட்டது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் திரைப்படம் 2021 பொங்கல் பண்டிகையினல் வெளியானது. இந்த படத்தில் மேலும் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன்,…

Read More

கொட்டுக்காளி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ், தி லிட்டில் வேவ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து இருக்கும் ‘கொட்டுக்காளி’ திரைப்படத்தில் சூரி மற்றும் அன்னா பென் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொழுதுபோக்கு அம்சங்களுடன், பாராட்டுக்குரிய திரைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ், அதன் அடுத்த தயாரிப்பான ‘கொட்டுக்காளி’ மூலம் பார்வையாளர்களை கவர உள்ளது. சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இந்த திரைப்படத்தைத் தயாரிக்கிறது என அதன் அறிவிப்பில்…

Read More