“தங்கலான்” டீசர் வெளியீட்டு விழா!

ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்க, இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் தங்கலான். இந்த வருடத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா, இன்று சென்னையில் படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் பிரமிக்க வைக்கும் தங்கலான் படத்தின் டீசர் மற்றும் மேக்கிங்க்…

Read More

”மம்முட்டியுடன் நடிப்பது மாபெரும் பாக்கியம்” ஐஸ்வர்யா மேனன்

கடந்த மாதம் ரிலீஸான தெலுங்கு மற்றும் பான் இண்டியா படமான ‘ஸ்பை’ சூப்பர் ஹிட் அடித்த வகையில் ஆந்திராவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகியிருக்கும் ஐஸ்வர்யா மேனன், கார்த்திகேயா, ‘ஸ்பை’ நாயகன் நிகில் சித்தார்த்தா உட்பட தெலுங்கின் முன்னணி ஹீரோக்களுடன் அடுத்தடுத்து பிசியாக வலம் வருகிறார். இந்நிலையில் மாபெரும் ஜாக்பாட்டாக மம்முட்டி படத்தின் நாயகியாக ஒப்பந்தமாகி, கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அவரது காம்பினேஷனில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா மேனன். இதுகுறித்துப் பேசிய அவர், “நான் மம்முட்டியின் தீவிர…

Read More

VT14 படத்தில் நடிகை நோரா ஃபதேஹி இணைந்துள்ளார்

பலாசா திரைப்பட புகழ் கருணா குமார் இயக்கவுள்ள, மெகா பிரின்ஸ் வருண் தேஜின் 14வது படத்தை, வைரா என்டர்டெயின்மெண்ட்ஸ் பேனரின் கீழ், மிகப்பெரும் பட்ஜெட்டில், மோகன் செருக்குறி (CVM) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா ஆகியோர் தயாரிக்கின்றனர். #VT14 திரைப்படம் வருண் தேஜ் திரை வரலாற்றில் மிகப்பெரும் பொருட்செலவில் எடுக்கப்படும் பிரமாண்ட திரைப்படமாகும். இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடிக்கவுள்ளார். இந்நிலையில் தற்போது பிரபல நடிகை நோரா ஃபதேஹி இப்படத்தில் இணைந்துள்ளார். பல அட்டகாசமான டான்ஸ்…

Read More

தன் பிறந்தநாளில் ‘விஷ்ணு விஷால் நற்பணி மன்றம்’ தொடங்கிய நடிகர் விஷ்ணு விஷால்

17.07.2023 பத்திரிகைச் செய்தி வணக்கம்! என்மீது அன்பு கொண்ட தம்பிகள் பலர், எனது திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் சமயங்களிலும், எனது பிறந்தநாளிலும் மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நற்பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள். அந்த நற்பணிகளுக்கு ஒரு அங்கீகாரம் வழங்கவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பிறந்தநாள் முதல் ‘விஷ்ணு விஷால் நற்பணி மன்றம்’ என்ற அமைப்பை தொடங்கி இருக்கிறோம்.! இதன் தலைவராக திரு.சீத்தாராம் அவர்களும், செயலாளராக திரு.KV.துரை அவர்களும் செயல்பட இருக்கிறார்கள். இனி எனது ரசிகர்களின் செயல்பாடுகள்…

Read More

ராம் பொதினேனி கதாநாயகனாக நடிக்கும் பான் இந்திய படமான ‘டபுள் ஐஸ்மார்ட்’ பிரமாண்டமாக தொடங்கியது!

உஸ்தாத் ராம் மற்றும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. அவர்களது முந்தைய கல்ட் பிளாக்பஸ்டர் படமான ‘ஐஸ்மார்ட் ஷங்கர்’ படத்தின் சீக்வலுக்காக இம்முறை இணைந்துள்ளனர். இந்தப் படத்திற்கு ‘டபுஸ் ஐஸ்மார்ட்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இம்முறை இரட்டிப்பு மாஸாகவும், இரட்டிப்பு பொழுதுபோக்காகவும் இந்தப் படம் இருக்கும். பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் இணைந்து இப்படத்தை பூரி கனெக்ட்ஸில் தயாரிக்கவுள்ளனர். விசு ரெட்டி தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். ’டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் பிரமாண்டமான தொடக்க…

Read More

தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியின் வெற்றியை கொண்டாடிய ‘எல். ஜி. எம்’ படக் குழு

இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரரான தோனியின் புத்திசாலித்தனமான அதிரடி ஆட்டத்தை நேரில் கண்டு, ‘எல். ஜி. எம்’ பட குழுவினர் வியந்து பாராட்டிக் கொண்டாடினர். சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது. இந்த போட்டியை நேரடியாகக் காண தோனி என்டர்டெய்ன்மென்ட் குழுவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. விறுவிறுப்பான படப்பிடிப்பு பணிகளுக்கிடையே தோனியின் தயாரிப்பில் உருவாகும் ‘எல். ஜி. எம்’ பட குழுவினர் இன்ப…

Read More

ஆசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ளும் ‘பொன்னியின் செல்வன்’ படக்குழு

மார்ச் 12 ஆம் தேதி ( நாளை ) ஹாங்காங்கில் நடைபெறவுள்ள கௌரவமிக்க 16வது ஆசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், தமிழ் சினிமாவின் பிளாக் பஸ்டர் திரைப்படம் “பொன்னியின் செல்வன் -பாகம் 1” (PS1) – சிறந்த திரைப்படம், சிறந்த இசையமைப்பாளர் (ஏ.ஆர்.ரஹ்மான்), சிறந்த தயாரிப்பு வடிவமைப்பாளர் (தோட்டா தரணி), சிறந்த எடிட்டிங் (ஸ்ரீகர் பிரசாத்), சிறந்த ஒளிப்பதிவு (ரவி வர்மன்) மற்றும் சிறந்த ஆடை வடிவமைப்பு (ஏகா லக்கானி) , ஆகிய 6 பரிந்துரைகளைப்…

Read More