தென்னிந்திய ஐந்து முன்னணி நடிகர்களின் படங்களோடு தன் இசையால் கலக்கும் தேவி ஶ்ரீ பிரசாத்

டிஎஸ்பி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத், தனது அதிரடி மற்றும் ஆத்மார்த்த இசையால் தென்னிந்தியா மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே ஈர்த்து வருகிறார். தேவி ஶ்ரீ பிரசாத்தின் அதிரடி இசையில் உருவான ‘புஷ்பா’ திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் முதல் முறையாக ஒரே சமயத்தில் 5 மொழிகளில் ஹிட் அடித்தது இவரது முக்கிய மைல்கற்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி வெளிநாட்டவர்களாலும் இவரது இசை ரசிக்கப்படுகிறது….

Read More

மீண்டும் இணையும் ‘ஈரம்’ பட வெற்றிக்கூட்டணி இயக்குநர் அறிவழகன் நடிகர் ஆதி இணையும் புதிய படம் “சப்தம்” !!

Aalpha Frames இயக்குநர் அறிவழகன் மற்றும் 7G Films சிவா இணைந்து தயாரிக்க, இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் ஆதி நடிக்கும் “சப்தம்” திரைப்படம் நேற்று (டிசம்பர் 14, 2022 ) எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது. தமிழ் திரையுலகில் முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் இயக்குநர் அறிவழகன். திரில்லர் படங்களை தனக்கே உரிய தனித்த திரைக்கதையில் வெற்றிப்படங்களாக மாற்றிய அறிவழகன், தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தை துவங்கியுள்ளார். ஈரம் படம் மூலம் அறிமுகமான இயக்குநர் அறிவழகன்…

Read More

‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா – இயக்குநர் கோபிசந்த் மலினேனி- மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாராகி வரும் ‘வீர சிம்ஹா ரெட்டி’ எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஜெய் பாலையா..’ எனத்தொடங்கும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் தயாராகி வரும் ‘வீர சிம்ஹா ரெட்டி’ எனும் புதிய திரைப்படத்தில் நடிகர் நடசிம்ஹா நந்தமூரி பாலகிருஷ்ணா இதுவரை திரையில் தோன்றிராத- மக்கள் விரும்பும் வேடத்தில் நடிக்கிறார். இது ரசிகர்களை உற்சாகப்படுத்தி எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது….

Read More