கட்டில் திரைப்பட சிங்கிள் டிராக் வெளியீடு !!!

Maple Leafs Productions தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பிரபல எடிட்டர் B.லெனின் கதை, திரைக்கதையில், இ.வி.கணேஷ்பாபு, இயக்கி நடித்துள்ள திரைப்படம் “கட்டில்”. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டினை பாட்டுத்திருவிழாவாகப் படக்குழுவினர் கொண்டாடினர். இவ்விழாவினில் கவிப்பேரரசு வைரமுத்து பேசியதாவது… தம்பி கணேஷ்பாபு என் பாசத்துக்குரியவர் நேசத்துக்குரியவர். ஒரு நேசத்தை எப்படி எடை போடுவது?, அதைக் காலம் காட்டிக்கொடுத்து விடும். நேரம், தோல்வி, வெற்றி எல்லாம் தாண்டி என்னோடு கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக பயணித்து வருகிறார் அவர் என் அன்புக்குரியவர்….

Read More

கேரளாவில் ஜென்டில்மேன்-2 படத்திற்காக மூன்று பாடல்களை உருவாக்கிய கீரவாணி-வைரமுத்து

பிரமாண்ட படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் மெகா தயாரிப்பாளர் ‘ஜென்டில்மேன்’ K.T.குஞ்சுமோன். 1993ல் இயக்குனர் ஷங்கரை அறிமுகப்படுத்தி பிரம்மாண்டமான ‘ஜென்டில்மேன்’ என்கிற வெற்றிப்படத்தை தயாரித்தார். இப்படம் வெளியாகி 30 வருடங்களான நிலையில், ‘‘(ஜென்டில்மேன்-2’’ படத்தை தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் கே.டி.குஞ்சுமோன். ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் தான் இசையமைத்த ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக ஆஸ்கர் விருதை பெற்றுத்தந்து இந்திய சினிமாவையே உலக அரங்கில் பெருமைப்படுத்திய இசையமைப்பாளர் M.M.கீரவாணி இந்தப்படத்தில் இசையமைப்பாளராக இணைந்துள்ளார். A.கோகுல் கிருஷ்ணா…

Read More

ஜென்டில்மேன்-2 பாடல் கம்போசிங் ஆரம்பம்

பிரமாண்ட படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் மெகா தயாரிப்பாளர் ஜென்டில்மேன்-2 பாடல் கம்போசிங் ஆரம்பம். உலகப் புகழ்பெற்ற போல்காட்டி பேலசில் ஆஸ்கர் நாயகன் M.M.கீரவாணி – வைரமுத்து – K.T.குஞ்சுமோன் இணைகிறார்கள்! மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் இயக்குனர் ஷங்கரை அறிமுகப்படுத்தி பிரமாண்டமான ‘ஜென்டில்மேன்’ வெற்றிப்படத்தை தயாரித்தார். இப்படம் வெளியாகி 30 வருடங்களாகிய நிலையில், இரண்டாம் பாகமாக ‘‘ஜென்டில்மேன்-2’’ படத்தை தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார், மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன். A.கோகுல் கிருஷ்ணா இந்தப்படத்தை…

Read More

பெருங்காமநல்லூரின் கலகக் குரல்…தமிழ்நாட்டில் இருந்து ஓர் உலகக் குரல்- ஆகோள் நூல் அறிமுக விழா

ஆகோள் என்ற இந்த நாவல் பெருங்காம நல்லூரின் கலகக் குரல். தமிழ்நாட்டில் இருந்து ஓர்உலகக் குரல் என்று கபிலன்வைரமுத்து எழுதி இயக்குநர் இமயம் பாரதிராஜா வெளியிட்ட ஆகோள் என்ற நாவலின்அறிமுக விழா தேனி மாவட்டத்தில் நடைபெற்றது. விழாவில் கபிலன்வைரமுத்து பேசியதாவது: 1920 ஆம் ஆண்டு பெருங்காமநல்லூரில் கை ரேகை சட்டத்திற்கு எதிராக ஆங்கிலேய அரசைஎதிர்த்து போராடி உயிர் நீத்த நம் முன்னோர்களுக்கு இந்த நாவலை காணிக்கையாக்கிஇருக்கிறேன். அவர்களுடைய கதையை எழுதியிருக்கிறேன். பெருங்காம நல்லூர் கலவரத்தைமட்டுமே ஒரு நாவலாக…

Read More

கலைஞரை கலங்க வைத்த படம்; தம்பி தங்கர் பச்சானுக்கு நன்றி! – நடிகர் சத்யராஜ்

ஒன்பது ரூபாய் நோட்டு படம் 15 வருடங்களுக்கு முன்பு நவம்பர் 30 ஆம் தேதி வெளியானது. அந்த படத்தைப் பற்றியும், அப்படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தைப் பற்றியும் நடிகர் சத்யராஜ் கூறியதாவது : வணக்கம். நவம்பர் 30, ஒன்பது ரூபாய் நோட்டு என்கிற அற்புதமான காவியம் வந்து 15 வருடங்கள் ஆகிறது. அதில் மாதவ படையாட்சி என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை; வாழ்ந்திருக்கிறேன்! என்று சொல்லுவார்கள். அப்படி என்னை வாழ வைத்தது அன்பு தம்பி தங்கர் பச்சான். கதை, திரைக்கதை,…

Read More

கபிலன் வைரமுத்து எழுதிய “ஆகோள்” இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டார்

எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்துவின் புதிய நாவலை இயக்குநர் பாரதிராஜா சென்னையில் வெளியிட்டார். ஆகோள் என்று பெயரிடப்பட்ட நாவல் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் குற்ற இனச் சட்டம் குறித்து ஒரு நவீன அணுகுமுறையை முன் வைக்கிறது. இந்த நாவல் நிகழ்கால தொழில்நுட்ப உலகின் பெருந்தரவு கொள்ளையை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது. 1920 ஆம் ஆண்டு கை ரேகை சட்டத்திற்கு எதிராக பெருங்காமநல்லூரில் நிகழ்ந்த போராட்டம் நாவலின் ஒரு முக்கிய பகுதியாக இடம் பெற்றிருக்கிறது. இயக்குநர் பாரதிராஜா நூலை அறிமுகம் செய்யும்…

Read More

தன் புதிய நாவலை வித்தியாசமாக அறிமுகப்படுத்திய கபிலன்வைரமுத்து

எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்து தான் எழுதியிருக்கும் புதிய நாவலை அறிமுகப்படுத்தும் விதமாக புத்தகத்தின் பின் அட்டைப் படத்தை தன் முக நூலில் பகிர்ந்திருக்கிறார். இது குறித்து அவர் செய்திருக்கும் பதிவு இது: நிழலுடைமை நிலம் யாருடையதோ அதிகாரம் அவர்களுடையது என்பது வரலாறு. அது நிலவெளி எதார்த்தம். நிழல்வெளியாக இருக்கும் இணையவெளி நவீன நிலவுடைமைச் சமூகமாக தன்னைக் கட்டமைத்துவருகிறது. Digital Feudalism என்று ஆங்கில அறிஞர்கள் அழைக்கும் நிழலுடைமை ஆதிக்கத்திற்குநம் தரவுகளின் பரிமாற்றமே எரிபொருளாக இருக்கிறது. வெளிவரவிருக்கும் என்…

Read More