வெற்றி மாறன் இயக்கத்தில் உருவான பிளாக்பஸ்டர் ‘விடுதலை – பாகம் 1’ இப்போது டைரக்டர்ஸ் கட் உடன் ZEE5 இல் தமிழில் ஒளிபரப்பாகிறது

~ விருது பெற்ற இயக்குனர் வெற்றி மாறன் தலைமையில் உருவான இந்தத் திரைப்படத்தில், மற்றவர்களுக்கிடையில் விஜய் சேதுபதி, சூரி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள் மற்றும் இத்திரைப்படம் தற்போது தமிழில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது ~ நேஷனல் 28 ஏப்ரல் 2023: ZEE5, இந்தியாவின் மிகப்பெரிய ஹோம் க்ரோன் வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் பன்மொழி கதைசொல்லி தளமான ZEE5, சமூக-அரசியல் கதைக்கள டிராமாவான ‘விடுதலை – பகுதி 1’ இன் உலகளவிலான டிஜிட்டல் வெளியீட்டை இன்று…

Read More

*’விடுதலை’ படத்தின் இசை வெளியீட்டு விழா*

எல்ரெட் குமார், ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, விஜய்சேதுபதி, பவானிஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடியத் திரைப்படம் ‘விடுதலை’. இசைஞானி இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (08.03.2023) நடைபெற்றது. விழா நாயகன் இளையராஜா பேசியதாவது, “ இந்தப்படம் திரையுலகம் இதுவரை சந்திக்காத களத்தில் நடக்கும். அவருடைய ஒவ்வொரு கதையும் வெவ்வேறு திரைக்கதை. 1500 படங்களுக்கு இசையமைத்த பிறகு சொல்கிறேன் வெற்றிமாறன் திரையுலகிற்கு முக்கியமான இயக்குநர். இந்தப் படத்தில் இதுவரை நீங்கள் கேட்காத இசையை கேட்பீர்கள்” என்றார். இசைவெளியீட்டு விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது, “‘விடுதலை’ படத்தின் தொடக்கம் ராஜா சார்தான். 45 நிமிடங்கள் படம் எடுத்து விட்டுதான் அவரிடம் காண்பித்தேன். அந்த காட்சிகளைப் பார்த்துவிட்டு ராஜா சார் இசையமைத்த பாடல்தான் வழி நெடுக காட்டுமல்லி பாடல். இந்த பாடலுக்கு இசைமைக்கும்போதே, இந்தப் பாடலை நான் எழுதுகிறேன் என்று சொல்லிதான் எழுதினார். பின்னணி இசையும் கேட்டேன். என் மனதில் ஒரு உணர்வு இருக்கிறது என்று அதை அவரிடம் விவரித்தேன். அதை அவர் உள்வாங்கி பாடல் ஆக்கி ஒலியாக அதை எனக்கு கொடுத்த போது மீண்டும் அந்த உணர்வு எனக்கு கிடைத்தது. அது மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. ராஜா சாரின் மியூசிக்கல் மைண்ட் எப்படி வேலை செய்கிறது என்பதை அருகில் இருந்து பார்ப்பது எனக்கு மிகப்பெரிய பரிசு என்று சொல்வேன். அவர் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள் எனக்கு மிகப்பெரிய கற்றல். நாங்கள் எல்லோருமே உங்கள் பாடல்களை கேட்டு வளர்ந்தவர்கள் தான் அதை சந்தோஷத்தோடு உங்களை இசையை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம்” என்றார். மேலும் அவர் பேசியதாவது, ”இந்தப் படம் எல்லா வகையிலும் எல்லாருக்கும்  சவாலானதாக இருந்தது. இந்தப் படத்தில் வேலை பார்த்த என்னுடைய அணி, தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் என அனைவருக்குமே நன்றி அனைவரும் மிக…

Read More

‘விடுதலை’ முதல் மற்றும் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு நிறைவு

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் எல்ரட் குமார் தயாரிப்பில் ‘விடுதலை’ பார்ட் 1 & 2 குறித்தான எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடையே அதிகம் இருக்கிறது. தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி மற்றும் பல திறமையான நடிகர்கள் நடித்துள்ளனர். ‘இசைஞானி’ இளையராஜா இசையமைத்துள்ள இந்தத் திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே பார்வையாளர்களிடையே பேசு பொருளாக உள்ளது. தற்போது ‘விடுதலை’ படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்தது என்பதை படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. ‘விடுதலை’ பார்ட் 1…

Read More

விடுதலை” திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராகிறது!!

RS Infotainment & Red Giant Movies, எல்ரெட் குமார் & உதயநிதி ஸ்டாலின் வழங்கும், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், Vetrimaaran directorial விஜய்சேதுபதி வாத்தியார் பாத்திரத்திலும் & சூரி முதன்மை பாத்திரத்திலும் நடிக்கும் “விடுதலை” படம் இரண்டு பாகங்களாக தயாராகிறது!!! படத்தின் அறிவிப்பு வெளியான நொடியிலிருந்தே திரையுலகத்தினரிடமும், ரசிகர்களிடமும் பேராவலை தூண்டியிருக்கும் இயக்குநர் வெற்றி மாறனின் “விடுதலை” திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராவதாக தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் திரைப்படத்தின் தரத்தினை உலக அளவில்…

Read More